பக்கம் எண் :

468

  இனைய சீலங்க ளெத்தனை யோவெனைப்
புனையும் பல்கலன் போலுள வாகவும்
நினைய கிற்றிலை நீமற்றந் நீர்மையை
எனைய வோவடை யாளமின் றென்றியால்.

11
   
  என்றெ டுத்தறி வீனனி சைத்தலும்
நன்ற றிந்தந லந்திகழ் வேதியன்
ஒன்றி யுன்னையு லகம கோத்தமன்
என்ற றிந்தனை யென்னினுங் கேட்டியால்.
12
   
  நனிதி கழ்ந்தொளி நல்கியி டுக்குறும்
புனித வாயில்பு குந்தரு நூல்வழி
இனிது நாடுமெ வர்க்கும ருள்வரால்
தனித மாரருண் மூர்த்தியோர் சாதனம்.
13
   
  முத்தி மாநகர் வாயிலின் முன்னுறீஇ
இத்தி ருத்தகு சாதன மேந்திடிற்
சித்தி ரப்பொற்க பாடந்தி றந்திடும்
உத்த மத்திருத் தொண்டரென் றொல்லையே.
14
   
  வள்ள லுய்த்தம ணிக்கடை வாயிலை
எள்ளி வந்திங்கி டைக்கிடை சேர்பவர்
கள்ள ரென்றிறை வன்கடை காவலர்
தள்ளி யோச்சுவர் சாதன மின்மையால்.
15
   
  ஏழை நீகதி மார்க்கத்தி யைந்துமென்
வாழி சாதனம் பெற்றுய்ம தியிலை
பாழி னீரிறைத் துப்பய னென்னைகொல்
சூழு கென்றனன் நன்மதிச் சூழ்ச்சியான்.
16
   
  பொருட ரித்தபு லமையர் போற்றுறும்
அருட ரித்தமெய் யாரணன் வாய்மையை
இருட ரித்தம னத்தின னெண்ணிலன்
குருட ருக்கொளி யாற்பயன் கூடுமோ.
17
   
  வலிய வந்துச ருவிவ ழிமறித்
தெலிய னேனையி ழுத்துவ ழக்கிடும்
புலிய ணீர்துரை மக்களும் போன்றுளீர்
கலியின் காலக்க ணக்கிது வேகொலாம்.
18