| |
முற்று
நீரெனக் கன்னியர் முன்பினீர்
பற்றொன் றும்மிலிர் பார்த்து மிரீரொரு
சற்று நேரத்திற் சாடுதி ரீதுநீர்
பெற்ற சாதனத் திற்பெறும் பேறரோ.
|
19 |
| |
|
|
| |
செல்லு
மின்விரைந் தும்வழி சேர்ந்தெமர்
நல்ல தேசமு றைப்படி நாடுவல்
புல்லு வேமிரு வேமுமப் பொன்னில
மல்லல் கூர்முத்தி மாநகர் வாயிலில்.
|
20 |
| |
|
|
| |
பேத
மென்கொல்முன் பின்னபின் முன்னவாம்
போது மோர்வழிப் பொக்கர்போ ருட்டிலே
கேத மில்கும ரிக்குங்கி ழவிக்குங்
காத மேவழி பார்க்குங்க ணக்கிலே.
|
21 |
| |
|
|
| |
நெருக்க
வாயில்பி டித்திந்நெ றிப்படப்
பெருக்க மாந்துன்ப நாளும்பி டிக்குமெந்
திருக்கு லாவிய தேசநின் றிவ்வழிச்
சுருக்க நாடிவந் தேனிதிற் றோடமென்.
|
22 |
| |
|
|
| |
தேரில்
நும்மவர் சேருறு மார்க்கமே
போ ருட்கதி மார்க்கம்பி றவெலாஞ்
சோர மார்க்கமெ னத்துணிந் தெள்ளுதிர்
சீரி தன்றுமக் கென்றனன் சீரிலான்.
|
23 |
| |
|
|
| |
அன்ன
வாசகங் கேட்டுட னாரியன்
முன்னம் பிக்கையை நோக்கிமு றைமைபோய்
தன்னை ஞானியென் றெண்ணுஞ்ச ழக்கனில்
நன்னர் மூடனை நம்புத னன்றெனா.
|
24 |
| |
|
|
| |
அமைவ
தேயைய சொற்றனை யாயினுஞ்
சுமடன் கேட்டவை தன்னுளந் தூக்குறச்
சமய நல்கிப்பின் சார்பறிந் தொண்மதி
கமையு டன்சொலிக் காட்டுத னன்றரோ.
|
25
|
| |
|
|
| |
சொன்ம
திக்கிணங் காப்படு துர்ஜநர்
நன்மை யாவுமி ழப்பர்தந் நாளுகத்
துன்ம னத்திற்று ணிந்துமு றுக்கிய
கன்ம பாசக்கட் டுண்டுக விழ்வரால்.
|
26
|