| |
தன்னிட்
டன்னவன் சாற்றுவ தோர்கிலன்
முன்னிட் டாலுமு றையறி வானலன்
பின்னிட் டாவன பேசுது மாலினி
உன்னிட் டம்முரை யென்றன னொள்ளியோன்.
|
27 |
| |
|
|
| |
நின்க
ருத்திது வென்றுநி தானியாய்
நன்கு ரைத்தனை நம்பிந வின்றதே
தென்க ருத்தென வேகுதும் யாமெனாப்
பொன்கு லத்தல நோக்கினர் போயினார்.
|
28 |
| |
|
|
| |
வேறு. |
|
| |
|
|
| |
போயினார்
சோகமார் பூமியோ டேகதித்
தேயநூ னெறிவிடா திடையிடைப் படுகருஞ்
சீயமார் தடமலைச் சிகரியு மடவியுந்
தாயினார் பிற்பட முற்படுந் தகையினார்.
|
29 |
| |
|
|
| |
தாகசோ
கங்களாற் றளருவார் சிலபகல்
வேகயாத் திரையினான் மெலிகுவார் சிலபகல்
தேகநோய் கண்டுளந் தேம்புவார் சிலபகல்
கோகுலத் தவரொடுங் குலவுவார் சிலபகல்.
|
30
|
| |
|
|
| |
வேதசாத்
திரமெடுத் தோதுவார் விரகொடே
கீதகா னந்தொடுத் துருகுவார் கிடைதொறும்
ஏதமில் கருணை துய்த் திறையினங் கோமகன்
பாதபங் கயமலர் பரவுவார் பலமுறை.
|
31 |
| |
|
|
| |
என்றிம்மண்
ணுலகைவிட் டிடுவமென் றெள்ளுவார்
என்றியாம் வீடடைந் திடுவமென் றேகுவார்
என்றிளங் கோமகற் காண்டுமென் றேங்குவார்
என்றுசே வடிநிழல் புகுவமென் றினைகுவார்.
|
32 |
| |
|
|
| |
சோகபூ
மியினெறித் தொடரின்முன் றுறவுறத்
தேகம்வன் பொறையுறத் தெருமர லுறுகினும்
மாகமா நகரணித் துறுமெனா மகிழ்வுகொண்
டேகினா ரூகமோ டேதில்வே தியரரோ.
|
33 |
| |
|
|
| |
சென்றுழிச்
சென்றுழிச் செல்லுமன் னிழலென
நின்றுழி நின்றுழி நின்றறி வீனனும்
பின்றொடர்ந் தணுகினான் பிரிவுறா னறிவுறான்
துன்றுதீக் காய்குவார் சூழ்ச்சியிற் றொடருவான்.
|
34
|