பக்கம் எண் :

471

  கருமமே கண்ணெனக் கண்டுமுன் செலுமவர்
திருமிநோக் குழியறி வீனனைச் சேய்மைகண்
டருமையீ தெமைவிடா தணுகுமா றறிதுமென்
றொருமனத் திருவர்நின் றொல்லைகூ விளிகொள.

35
   
  வீரியத தொடும்விரைந் தவணுறும் விரகிலாப்
பூரியன் றனைமுகப் பொலிவொடேற் றுபசரித்
தாரியன் சுகம்வினா யண்டர்நா யகனொடுன்
காரியத் திறமெவன் கழறுகென் றுரைசெய்தான்.
36
   
  தேசிகக் குரவகேள் ஜீவர க்ஷணையெனக்
காசையுண் டுண்டுநம் பிக்கையு மகிலலோ
கேசனைச் சிந்தைவைத் தீறில்முத் தியைவிழைந்
தூசலா டுள்ளமு முண்டெனக் கென்றுமே.
37
   
  சாற்றுமித் தகையசா தனமெனக் குண்மையின்
மாற்றருந் தபையமெய்ம் மகிழ்வுளத் தூடுலாய்
ஊற்றிருந் தொழுகலி லுலகசம் பத்தெலாம்
போற்றிடா திவ்வழிப் போந்தனன் றுறவியாய்.
38
   
                வேறு.
   
  என்றறி வீனனீ தியம்பக் கேட்டலும்
வென்றியம் பகவனை விதேக முத்தியைக்
கன்றிய வலகையுங் கள்ள மார்க்கரும்
என்றுமுள் குவர்கதி யெய்தற் பாலரோ.
39
   
  அரும்பெறன் மெய்விசு வாசத் தாட்சியின்
பெரும்பய னினைப்பினி லடையப் பெட்புறும்
இரும்பியன் மனத்தசோம் பேறி யாத்துமம்
விரும்பியும் பெறாதென விள்ளும் வேதமே.
40
   
  வெறுத்தன னுலகவாழ் வெனவோர் வீரியம்
இறுத்தனை சான்றெது வென்னி லெம்பிநீ
கறுத்திடு மிதயமே கரியென் பாயிது
மறுத்திடற் பாலதா மரபு கேட்டியால்.
41
   
  உற்பவ தோடருக் குலக வாவறல்
அற்பமோ வன்றென வறிகி லாமையிற்
பற்பலர் முயன்றுபாழ் பட்டுத் தாமுடைக்
கற்பித வெண்ணத்துக் கவிழ்கின் றாரரோ.
42