பக்கம் எண் :

473

  சேணுறு நன்னெறிச் செலவு தீர்ந்தொரீஇக்
காணரு மாறுபா டாய கள்ளமுங்
கோணலுங் குலவிய குறுக்குத் தீவழி
நாணிலா தொழுகுத னரசு பாவமாம்.

51
   
  புரையறு புண்ணியப் புனிதத் தேமொழி
கரையறு கபட்டிரு தயத்தின் கள்ளத்தை
உரைபடு நடககையை யோர மின்றியே
வரையறைப் படுத்திய மரபு காண்டியால்.
52
   
  இந்நெறி யாய்மறை யியம்பு முண்மையைத்
தன்னகத் துணர்ந்தெலாஞ் சரியென் றொப்பிய
நன்னர்நெஞ் சேநலஞ் சுரக்கு நன்னடை
துன்னிநின் றுரப்படுஞ் சூழ்ச்சி காணிது.
53
   
  தன்னுறு கேட்டினை யுணரத் தக்கவந்
நன்னர்நெஞ் சுன்னத நாய கன்றனை
உன்னுறு விதஞ்சிறி துரைப்பல் கேளெனாப்
பன்னுவான் றொடங்கினன் பார மார்ததிகன்.
54
   
  காமுறு நினைவையட் கருத்தின் வஞ்சத்தைத்
தீமையை யியத்துட் டிணிந்த தோடத்தை
நாமுறு கேட்டினை நாடி நம்மினுங்
கோமக னறிவரென் றுளங்கொ திக்குமால்.
55
   
  உண்டென நினைக்குநம் முரிய நீதியை
மண்டுதுர்க் கந்தமாய் வரைவ ரல்லது
கண்டுளஞ் சகிப்பரோ கருத ரும்பர
மண்டலா திபரென மனம்ப தைக்குமால்.
56
   
  கறுப்புறு குட்டநோய் கழுமி யாக்கையின்
உறுப்பெலா மழுகிச்சீ யொழுகி லோகரால்
வெறுப்புறு புலையனே னசுத்த வெவ்வினை
பொறுப்பரோ புனிதரென் றுள்ளம் பொங்குமால்.
57
   
  இத்திற மறிகிலை யெம்பி யுன்னிலே
உத்தம விருதய முண்டென் றுள்ளுதி
வித்தக வொழுக்குளை யெனவி யக்குதி
யெத்தனை பிழையென வேழை யோர்கிலாய்.
58