| |
நீதிமா
னெனவுனை நினைக்கு மட்டுநீ
கோதிலாக் கிறிஸ்துவின் குறைவி னீதிகொண்
டாதியான் றிருச்சர ணடைகு வாயலை
ஏதமின் மெய்விசு வாச மெங்குளை.
|
59 |
| |
|
|
| |
என்றுமெய்
யுணர்வகத் தெழவி யம்பினான்
பொன்றிகழ்ந் தெனமிளிர் புகரி னன்மதி
ஒன்றிலிக் குடமென வொருங்கு போக்கியே
நன்றெது மறிகிலா னவிற்று வானரோ.
|
60 |
| |
|
|
| |
பாவிகட்
காநம பரம னோர்சுதன்
ஆவிவிட் டனரவற் கடங்கிக் கீழ்ப்படுந்
தாவரு நீதியாற் சாபம் போக்கியெங்
காவல ரெனையங்கி கரிப்ப ரென்பதும்.
|
61 |
| |
|
|
| |
புண்ணிய
மூர்த்திதம் புண்ணி யத்திலெற்
கண்ணிய பத்தியின் கருமம் யாவுமோர்
அண்ணலுக் கர்ப்பண மாகு மென்பதுந்
திண்ணிய வென்விசு வாசச் செவ்விகாண்.
|
62 |
| |
|
|
| |
இவ்விசு
வாசத்தி லியைந்த நீதியுஞ்
செவ்விய நீதியில் ஜீவ ரக்ஷையுங்
கவ்வையின் றாய்வரு கணக்கை யோர்கிலை
எவ்வகை திகைத்தனை யியம்பு கென்றனன்.
|
63 |
| |
|
|
| |
எள்ளரு
நல்லவித் திட்டென் செய்யினும்
அள்ளலோங் குவர்நில மளிக்கு மோபயன்
ஒள்ளிய நறுவிரை யுண்ட போதினும்
உள்ளியின் குணஞ்சிறி தொருவற் பாலதோ.
|
64 |
| |
|
|
| |
எத்திற
முடியினு மேழைக் கீண்டியான்
உத்தம மெய்விசு வாசத் துண்மையின்
வித்தக முறையினை விளக்க னன்றொனாச்
சித்தமுற் றாரணன் செப்பன் மேயினான்.
|
65 |
| |
|
|
| |
உள்ளுறு
முன்விசு வாசத் துண்மைதான்
வெள்ளென வெளுத்ததுன் னுரையின் மேயதுன்
பிள்ளைமை யிடையில்வந் துதித்த பேதைமை
கொள்ளும்வீண் பத்தியாய்க் குலவிற் றாமரோ.
|
66 |