|
கிரியைநோக்
காமலே கிறிஸ்தி ரக்ஷகர்
புரைதபு புண்ணியப் பொலிவின் மாட்சியால்
குரைகடற் புவிக்கெலா மிரக்ஷை கூடுமேல்
வரைவதென் பாவத்தை மதிவ லோயென்றான்.
|
75 |
|
|
|
|
ஆரியன்
கேட்டறி வீன னுன்பெயர்
பேரியற் பொருளணுப் பிசகு றாமலுன்
பூரிய வாய்மொழி புலப்ப டுத்துமால்
நீரிய னிலத்திய லென்னு நீர்மைபோல். |
76 |
|
|
|
|
கோதியன்
மாந்தரைக் கோதி லாரென
நீதிமா னாக்கிடு நீதி மாண்பையும்
வேதனார் நீதிக்கு விலக்கி நற்கதி
ஈதலின் மரபையு மின்னுந் தேர்கிலை.
|
77 |
|
|
|
|
இத்தகை
யெனமுன மெடுத்தி யம்பிய
அத்தகு மெய்விசு வாச மாக்கிடும்
உத்தம பலன்களை யுசிதச செய்கையை
எத்தகு வனவென யாதுந் தேர்கிலை. |
78 |
|
|
|
|
என்னினுந்
தெரிப்பலெம் மிருத யத்தினை
முன்னவன் கிறிஸ்துவின் மூல மாய்ப்பிரான்
சந்நிதிக் குய்த்திடுந் தயையன் பாதிய
பன்னருங் குணங்களைப் பாலித் தூட்டுமால்.
|
79 |
|
|
|
|
தனதுட
லுயிர்பொருள் தனக்கின் றாமென
அனவர தாதிபற் காக்கி யன்பினான்
மனமொழி மெய்களின் வணங்கி வாழ்த்தியும்
தினபர வசமுறச் செய்யு மாலரோ.
|
80 |
|
|
|
|
சுருதியைச்
சுருதியிற் றோன்று மார்க்கத்தைக்
கருதிமெய் யுணர்வொடு கலந்தம் மார்க்கத்து
வருதிருத் தொண்டரை மதித்துள் ளன்பினாற்
பருவரல் சகித்திடும் பான்மை நல்குமால்.
|
81 |
|
|
|
|
சொற்றவித்
துணைகொலோ சுகிர்தம் யாவுக்கும்
உற்றவோர் மூலமா யுயிருற் றோங்கிய
அற்றமின் மெய்விசு வாச வாக்கத்தைப்
பெற்றவ ரேநித்ய ஜீவப் பேறுளார்.
|
82 |