|
கருத்தனாங்
கிறிஸ்துவின் காட்சி யுற்றிடு
திருத்தகு மெய்விசு வாசச் செவ்வியிற்
பொருத்தமா மன்புறு கிரியை புண்ணியர்
அருத்துவர் கிருபையா ரமிர்த போனகம்.
|
83 |
|
|
|
|
அன்புறு
கிரியையோ டளவ ளாவிடும்
பொன்புரை மெய்விசு வாசம் பூத்திடின்
மன்பெருந் துரிச்சையின் வாயிற் பெய்வதோர்
கொன்பயில் கலினமாங் குறிக்கொள் வாயென்றான்.
|
84 |
|
|
|
|
அவ்வயிற்
கடவுள்வேந் தருட்கு மாரனை
எவ்வகை வெளிப்படுத் தினரி வற்கெனச்
செவ்வியோய் வினவுகென் றுரைப்பச் சீரிலா
அவ்விய னகங்கடுத் தறைகு வானரோ.
|
85 |
|
|
|
|
விண்ணுல
காளியோர் விபுத மைந்தனைக்
கண்ணெதிர் மயலறக் காண வேகொலாம்
எண்ணிய வெண்ணநும் மிருவர் வாய்மையுந்
திண்ணறி வீனத்தைத் தெரிக்கு மாலரோ.
|
86 |
|
|
|
|
எத்தனை
யாகவீ ணெண்ணங் கொள்ளுதிர்
எத்தனை நுணுக்கமா யெடுத்தி யம்புதிர்
எத்தனை நும்விசு வாச மென்னினும்
அத்தனைக் குங்குறை வல்லன் யானென்றான்.
|
87 |
|
|
|
|
இத்தலத்
தவரெலா மிறைவ னோர்திருச்
சித்தமுய்த் துணர்கிலர் ஜென்மத் தீட்டினால்
உத்தம கிறிஸ்ருவை யெமக்கிங் குள்ளுற
அத்தனே வௌப்படை யாக்க வேண்டுமால்.
|
88 |
|
|
|
|
தெய்விக
வெளிப்படைத் தேற்ற மின்றெனில்
உய்வருள் பவர்திருக் குமர னுற்றவர்
தைவிகர் தந்தையி லுளரெ னத்தகு
மெய்வெளி வருவகை யாது விள்ளெனா.
|
89 |
|
|
|
|
வேதிய
னொல்லையே விநய மாய்விளித்
தாதர வோடுநம் மான்ம ரக்ஷணை
காதலாய் நுட்பமாய்க் கருது றாமல்யாம்
பேதமை யாலெமிற் பிணங்கற் பாலதோ.
|
90 |