|
சிருட்டிக
ராகிய தேவ தந்தைதம்
அருட்டுணை மைந்தனை யறியு மாறிவண்
தெருட்டினா லன்றியார் தெருள வல்லவன்
பொருட்டிற னறிந்தவன் புகன்ற துண்மைகாண்.
|
91 |
|
|
|
|
புன்னர
ஜீவரைப் புரக்கப் போந்தவம்
மன்னொரு சுதனையா மனத்து ளுய்ப்பதற்
குன்னதத் தரசனே யுவந்து நம்மகத்
தின்னருட் கிரியையை யியற்ற வேண்டுமால்.
|
92 |
|
|
|
|
மாயமின்
மெய்விசு வாச மாட்சியை
நீயறிந் திலைசிறி தேனு நின்னிகல்
வாயுரை தெரித்தமேல் வருநிர்ப் பந்தத்தை
ஆயுதி யாயுணர்ந் தறிதி தாழ்த்திடேல்.
|
93 |
|
|
|
|
ஜேசுவே
யடைக்கலம் ஜெகத்தி னுக்கெலாம்
ஈசனு மவர்கும ரேசன் பக்கலில்
ஆசையோ டேவிரைந் தடுப்பை யாயிலுன்
பாசவெவ் வினைகள்வேர் பறியுங் காண்டியால்.
|
94 |
|
|
|
|
பாவநி
வாரணப் பயனி தொன்றுகொல்
தேவகோ பாக்கினைத் திகிலு நீங்கிடும்
ஜீவர க்ஷணையு மெய் வாழ்வுஞ் சித்தியாம்
ஆவலித் தோடுதி யகங்கு விந்தரோ.
|
95 |
|
|
|
|
சொன்மதி
யிவ்வெலாஞ் சுருதி கூறுமெய்
நன்மதி யாதலி னயந்துட் கொண்டுநீ
உன்மதி யீனத்தை யொருவி யொல்லையே
சென்மதி கிறிஸ்துவைச் சேவி யென்றனன்.
|
96 |
|
|
|
|
ஒள்ளியூர்
படபடத் துரைக்கு மாறுபோல்
துள்ளுதிர் நடையிலு மெனக்குத் தூரமால்
மெள்ளமெள் ளத்தனி வருவல் விட்டுமுற்
கொள்ளுதி ரென்றனன் குணத்தைக் கொள்கிலான்.
|
97 |
|
|
|
|
வாட்படை
யனையசொல் வழங்கக் கேட்பினுங்
கோட்படா மனத்தினன் குறிக்கொண் டானலன்
கேட்பினுங் கேட்கிலாத் தகைய கேள்வியாற்
றோட்குறாச் செவியெனுஞ் சொற்பொய் யாவதோ.
|
98 |