|
ஆரியன்
றோழனை நோக்கி யையவீண்
காரிய மினியிவண் காலம் போக்குதல்
சீரிய கதிவழி விரைந்து சேறலே
கூதிய மதியெமக் கென்று கூறினான்.
|
99 |
|
|
|
|
ஆமிதே
கருமமென் றவனு நேர்ந்தனன்
மீமகீ பதிதிரு வருளை வேண்டினார்
பாமரன் றனையொரீஇப் பாதை பற்றினார்
கோமகன் றிருப்புகழ் குறிக்கொண் டென்பவே.
|
100 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
ஜீவவழி
செல்பொழுது தேசிகனு மேழைப்
பாவியறி வீனன்முடி விற்படரு ழக்கப்
போவதைநி னைந்தெனுளம் புண்படுவ தைய
ஆவதினி யாதுசெய லகம்வழிய வந்தோ.
|
101 |
|
|
|
|
என்றுபரி
தாபமொடி யம்பலுநம் பிக்கை
ஒன்றுமதி யெத்தனையு ரைத்துமறி வீனன்
பொன்றும்வழி யூடுதன போவதுது ணிந்தான்
நன்றறியு மெந்தையிதி னாம்பிாவ தென்னே.
|
102 |
|
|
|
|
பித்துலக
மாயவலை யூடுபிணி யுண்டு
மத்தமுறு மாயபுரி யின்மறுகு தோறும்
உய்த்துணர்வி லாதுபடு மோசமுறு கின்றார்
இத்தகைய ரெத்தனைய ரென்பனுனக் கென்றான்.
|
103 |
|
|
|
|
தூயசுவி
சேஷவொளி தோற்றிரிய தாகப்
பேயலகை யாயபிர பஞ்சவதி காரி
மாயவிசு வாசிகண்ம னக்குருடு செய்தான்
ஆயதிவ கைத்தெனினு மையவிது கேண்மோ.
|
104
|
|
|
|
|
சோரவழி
யூடுதிரி துர்ஜநர்த மக்கும்
பாரமிகு பாவவுணர் வுண்டுபய முண்டென்
றொரினுமி யற்கையறி வீனமுற லாலே
சீரடையு மார்க்கமில ராயுணர்வு தேய்வார்.
|
105 |
|
|
|
|
முற்றுநல்லு
ணர்ச்சியொடு மூளுமனஸ் தாபம்
உற்றவிடை யாத்துமநல் லூதியமி தென்னாத்
தெற்றவுண ராததுசி தைக்கவகை செய்தே
துற்றுடலி னிச்சைவழி யிற்றுணிவு கொள்வார்.
|
106
|