பக்கம் எண் :

480

  இன்னவகை யாயவுணர் வாதியித யத்தில்
துன்னிநிலை பெற்றிடுமெ னிற்சுருதி கூறும்
நன்னெறிபு குத்துமென நம்பிகரு துற்றாய்
அந்நெறிதெ ரிப்பலென வாரணன்வி ரிப்பான்.

107
   
  பாவபய முன்னதப யம்பகரி ரண்டில்
ஒவலுறு முன்னையதி டைக்கிடையு யிர்த்துத்
தேவபய முள்ளுறுமெ னிற்றிகழ்மெய்ஞ் ஞானம்
மேவுமது வேவிதிவி லக்கின்வழி யுய்க்கும்.
108
   
  தீத்தொழிலை விட்டொருவு கென்றுமதி செப்பும்
மாத்தகைய ரக்ஷகரை நாடிவழி பட்டுன்
ஆத்துமவி ரக்ஷைபெறு கென்றறிவு றுத்துந்
தோத்திரஜெ பங்களைய கத்திடைதொ குக்கும்.
109
   
  உத்தமநல் லாவியறி வூட்டுமுறை பற்றிச்
சுத்தமன ரம்பியசு சீலசுகிர் தங்கள்
வித்தகவி வேகமின மேவியருள் வேத
சத்தியமு றைக்குநிலை தந்துதரிப் பிக்கும்.
110
   
  இப்பெருந லந்தருவ தேதுபய மதுவே
செப்பரிய தேவபய மற்றிதுதெ ளிந்தோர்
தப்பில்விசு வாசமுறை சார்ந்திறுதி காறும்
ஒப்பரிய வுத்தமவொழுக்கநெறி நிற்பார்.
111
   
  செவ்விதிக ழுத்தமப யத்தினுறு சீலம்
இவ்வகைய வென்றுதுணி யாதவறி வீனர்
வெவ்வியபி சாசுளம்வி ளைத்ததென வெண்ணி
அவ்வியல்கெ டுத்துளம டக்கியலை வாரால்.
112
   
  ஐயவிது காறுமறி வீனனியல் பேசி
மையதுறு சோகமணு காதுவழி வந்தேம்
வையகவ ழிக்கடையின் மல்குபெரு வாழ்க்கை
கையுறவ டுத்தனமி தோகடிகை தூரம்.
113
   
  என்றகம கிழ்ச்சியோடி சைந்துவழி யேகி
வென்றிபுனைவேரியன்வி ளம்பிடவி யந்து
நன்றுமிக நன்றெனநம் பிக்கையுந டந்தான்
ஒன்றியிரு வோருநெறி யேகினரு வந்தே.
114
   
       அறிவீன வர்ச்சிதப் படலம் முற்றிற்று