|
நிலைகேடனாதியர்
விவரணப் படலம்
|
|
|
|
|
|
|
|
ஊசிபுகு
மாறுசெலு நூலினொரு வாமே
ஆசறுநம்பிக்கைவிசு வாசியைய டுத்துப்
பேசிநடை கூடினனோர் பேதமில ராக
ஈசனைவ ழுத்திநெறி யேகினர்வி ரைந்தே.
|
1
|
|
|
|
|
அங்கணொரு
சூழலைய டுத்துமறை தேர்ந்த
புங்கவனம் பிக்கைமுக நோக்கிமதி பூத்தோய்
கங்குலித யத்துநிலை கேடனொரு கஞ்சன்
எங்குளன றிந்தனைகொ லோபுகறி யென்றான்.
|
2
|
|
|
|
|
நன்றறிவ
னானவனை நாணயபு ரத்துக்
கொன்றியவ மார்க்கபுர மென்பதவ னூராம்
முன்றனையு ணர்ந்துபய றுமன முட்டி
மன்றனகர் யாத்திரைம தித்தனனொ ருக்கால்.
|
3 |
|
|
|
|
மாயநக
ரிக்கருக மார்க்கபுர வாயில்
ஆயதுகொ டென்வயின டுத்துநிலை கேடன்
மேயவுணர் வும்பயமும் விண்டுவிழி வழிநீர்
ஏயவுள ழுங்குவனி ரக்ஷையைவி னாவி.
|
4 |
|
|
|
|
பண்டுபல
காலவன கத்தெழுப யத்தைக்
கொண்டுமிரு கண்கலுழி கோத்திடுகு றிப்பைக்
கண்டுமிவ னுக்குயிரி ரக்ஷைபெறு கவலை
உண்டுமென நம்பிமன முருகியதெ னக்கும்.
|
5 |
|
|
|
|
இப்பரிச
ருப்பினுநம் மீசனொரு சித்தம்
எப்பரிசெ னாவதைய றிந்தினிதி யற்ற
ஒப்பிநடை கொள்கிலர்கண் ணீர்நனியு குக்கும்
அப்பரிசி னென்பயனெ னாச்சிறிதை யுற்றேன்.
|
6 |
|
|
|
|
எத்தனைய
ரோபரம நாமமெடுத் தோதிக்
கத்துபவ ரல்லர்கதி காண்பவர்க ருத்தன்
சித்தமறி வுற்றது செ யற்குளம கிழ்ந்த
உத்தமர்க ளேயெனுமு ரைத்திறமு ணர்ந்தேன்.
|
7 |