|
ஆங்கவன
கத்தயல்தன் மீட்சியும றப்பின்
வாங்கியுமெ னப்பெயர்வ திந்தமதி கேடர்
நீங்கரிய நட்பினரி வற்கவர்நி கழ்த்துந்
தீங்குமொழி கொண்டெழுநற் சிந்தனைதொ லைத்தான்.
|
8 |
|
|
|
|
ஐயநிலை
கேடன்முத லாயவர்தி றத்தென்
நொய்யமதி யிற்படுக ருத்தைநுவல் வன்பின்
செய்யமதி யுள்ளுறைதெ ரித்தியினி தென்னா
மையறுநம் பிக்கைமுன்வ குத்திடுவ தானான்.
|
9 |
|
|
|
|
இக்குறிப
டைத்தவர்தம் மின்னலுறு பாவச்
சிக்குளமெ ழும்பபநர கத்திகில டைந்து
புக்கரிய வான்கதிபு குந்திடவி ரும்பி
முக்கியவி ரக்ஷைவழி செல்லமுயல் கின்றார்.
|
10 |
|
|
|
|
பின்னர்சில
வைகலொரு பெற்றிகழ யப்போய்
அன்னர்பிற விக்குணம கத்திடையெ ழும்பி
முன்னுறுமு ணர்ச்சியையோ ருங்கறமு ருக்க
நன்னெறியொ ரீஇமுனெறி நச்சிநுழை கின்றார்.
|
11 |
|
|
|
|
மேதகுவை
தீகநடை வித்தகவி வேகஞ்
சாதுகுண சீலமொடு தர்மநெறி யாவும்
ஒதுபிற விக்குணமு யர்ந்திடிலொ ழிக்கும்
ஏதுகுண மேலிடும தற்கடிமை யெல்லாம்.
|
12 |
|
|
|
|
ஆண்டகைகி
றிஸ்துவைய றிந்தவறி வாலே
தீண்டரும சுத்தவுல கத்துநெறி சீத்து
மீண்டவர்ம றுத்துமவ்வி டர்க்குள்விழு வாரேன்
மூண்டெழுபல் கேடுறுவர் முன்னையிலும் பின்னை.
|
13 |
|
|
|
|
நீதிநெறி
நீர்மையைய றிந்துமதி னின்றும்
மாதகைய கட்டளையை வல்லிதின்வ ரைந்து
போதலினு முந்துறவப் போதமடை யாமே
மேதினியி னூடலைதன் மிக்கநல மன்றோ.
|
14 |
|
|
|
|
கச்சியத
யின்றுகடை காத்துயிர்க ழிக்குங்
குக்கல்கழு வப்படினுங் கோதுபட வொல்லை
புக்குளைபு ரண்டலையுங் கோலமது போலிம்
மக்களும சுத்தநெறி யூடுமறி வாரால்.
|
15
|