|
வேறு.
|
|
|
|
|
|
பிறவித்
தீக்குணச் செயலிது பிரபஞ்ச மயக்கின்
உறவு மச்சமு மேலிட நரகச்ச மொடுங்கி
மறவி யாதலி னுலகின்ப நுகர்ந்துயிர் வாழ்தல்
அறவி யற்கையென் றகக்கரி மழுக்குகின் றாரால்.
|
16 |
|
|
|
|
அலகி
லாரண நூனெறி பிடிததலி னவியா
துலக நிந்தைமேன் மேலுமு பாதிதொக் கோங்குங்
கலக மாமதாற் றந்திரோ பாயத்தாற் கழிப்பாம்
இலகு மாயுளென் றெண்ணியும் பின்னிடை கின்றார்.
|
17 |
|
|
|
|
புலநு
கர்ச்சியை விழைந்திறு மைந்துயிர் போலத்
தலம ருத்துபுன் போகத்துத் தலைதடு மாறிச்
சுலவு மாயவின் பங்களைத் துய்த்தகந் துலக்கிக்
குலவு நல்லுணர் வனைத்தையும் புதைப்பரிக் கொடியோர்.
|
18 |
|
|
|
|
மேவு
நன்னெறி யால்வரு வெட்கத்தி னிடறி
ஒவி லாணவத் தருக்கினா னல்லுணர் வொழிந்து
வீவின் றாய்வரும் வேதனைக் கிடங்கர்வீழ் கின்றார்
தேவ பத்தியி னலத்தையுற் றாய்கிலாச் சிதடர்.
|
19 |
|
|
|
|
சுலவு
பாவமும் பயங்கரத் தொகுதியுஞ் சூழ்ந்து
நிலவி மேல்வரு மாக்கினைத் தீர்ப்பையுண் ணினைந்து
விலவி லத்தக நடுங்கலில் விருப்பமின் றாகி
உலவு கின்றனர் பாவத்தி லூசலா டுளத்தர்.
|
20 |
|
|
|
|
மூல
மாயகத் தெழும்புநல் லுணர்ச்சியை முறையே
பால னஞ்செய்து காக்கின்ற பத்திமைக் குழுக்கள்
மேலை நிர்ப்பந்த விழலிலே வீழ்ந்தழி வதன்முன்
சால வேயடைக் கலம்புகுந் துய்குவர் சரதம்.
|
21 |
|
|
|
|
தந்தை
கேட்டிசன் மார்க்கத்து நடுநிலை தவறி
வெந்துன் மார்க்கத்துக் கவிழ்த்துமே துக்களை விதந்தேன்
எந்த வாறுமின் வாங்குகின் றாரென வெடுத்துச்
சிந்தை யாரநீ தெரிக்கென வேதியன் றெரிப்பான்.
|
22 |
|
|
|
|
தெள்ளி
யோய்நிலை கேடனா தியரகந் தெளிந்தங்
குள்ள கோதெலா நனிவடித் துரைத்தனை யுள்ளம்
விள்ளு நல்லுணர் வோடெழு மெய்மன ஸ்தாபங்
கொள்ளு நீரரே நிலைபிச காநிற்குங் குணத்தர்.
|
23 |