|
நின்ற
நன்னிலை தவறிப்பின் வாங்கிடு நீசர்
சென்று சென்றுதுன் மார்க்கத்துச் சிக்குணுஞ் சீர்கேள்
நன்று தெய்வத்தை மரணத்தை நரகவெஞ் சிறையை
ஒன்று முள்கிலா மறதியே மூலவுற் பாதம்.
|
24
|
|
|
|
|
வேத
கைதிக வொழுக்கெலா முறைமுறை விடுதல்
சாத கம்பெறு பாவத்தை யிச்சையைத் தழுவல்
பேத மைத்துணி கரங்கொடு பிரபஞ்ச மயக்கம்
ஒது சற்குரு மங்களை யொழிதலே யுபயம்.
|
25 |
|
|
|
|
இனைய
துர்க்குண சீலங்க ளிதயத்துக் கெழுமிக்
கனவு போன்றுசின் னாட்செலக் கருத்திடைக் கதித்து
நினைவ னோங்கிப்பின் வாக்கினுஞ் செயலினு நிலவி
வினையி னால்வர வரவெறிப் பட்டிடும் விரகாய்.
|
26 |
|
|
|
|
மெய்க்கி
றிஸ்தவர் கூட்டுற விழிவென விடுவர்
பொய்க்கு ருக்களென் றிகழுவ ரறவரைப் பொதிந்து
வைக்குந் தீமைக்குப் புகல்சொல மறையவ ருள்ளங்
கைக்கு ளேநரை முளைத்ததென் றெள்ளுவர் கடுகி.
|
27 |
|
|
|
|
ஜெகந்த
ழைத்திடு சிற்றின்பப் பிரியருல் லாசர்
முகந்து கொள்பொரு ளாசையர் முழுக்குடி வெறியர்
அகந்தை யாளர்பே ருண்டிய ராயமற் றிவரோ
டுகந்து நண்பராய்க் கூட்டுண்டு களிப்பரிங் குழன்றே.
|
28 |
|
|
|
|
வைகல்
சிற்சில கழியவும் வரம்பிலாப் பாவச் செய்க
லந்தனு போகத்தை விளைப்பதே செயலாய்
உய்க லாநெறிக் கோடியா டித்திரிந் துலவிப்
பொய்க லந்தவா ணாளிறப் பொன்றுவர் முடிவில்.
|
29 |
|
|
|
|
இத்தி
றத்தருக் கிரங்கிநம் மிரக்ஷணா மூர்த்தி
அத்து டக்கினின் றகற்றியுய் வருளில ராயின்
தத்த மக்குவைப் பாக்கிய கெடுநிதிச் சலதிக்
குத்தி யோகம்பெற் றுழல்வரா லூழியோ டூழி.
|
30 |
|
|
|
|
என்றிவ்
வாறுரைத் துறுநிலை கெட்டுப்பின் வாங்கித்
தன்று ணைப்பெரு மீட்பினி யுண்டெனத் தருக்கும்
பொன்று தீக்குண வியல்பெலாம் போகவிட் டிடுதுந்
துன்று சோகபூ மியினொடு மென்றனன் றூயோன்.
|
31
|