|
பன்னற்கரி
தாயப வித்திர ஞான செல்வம்
மன்னிப்பொலி யுந்திரு மாநகர் மன்னர் மன்னன்
இன்னற்படு பாதல நின்றெடுத் தெம்மை மீட்பான்
நன்னர்க்கும ரேசனை நல்குமெய்ஞ் ஞான மூர்த்தி.
|
1 |
|
|
|
|
இல்லாமையி
லேவெளி வான்முகட் டெண்ணி றந்த
பல்லாயிர கோடிய வாம்பகி ரண்ட கோளம்
எல்லாம்படைத் தொண்விதி காட்டியி யங்கு வித்த
சொல்லாற்றன்மி கும்பர லோகது ரந்த ரேசன். |
2 |
|
|
|
|
மங்காதப
ரஞ்சுடர் வாக்குரு வாய மைந்தன்
பொங்கோதவைப் பும்புரை யற்றகல் வானு மெங்கும்
செங்கோல்பிடித் துத்தனி யாழிசெ லுத்த நாளும்
தங்காவலை யுய்த்தர சாட்சிசெய் சார்வ பௌமன். |
3 |
|
|
|
|
ஆனாதந
லந்திகழ் தைவிக வாத்து மேசன்
சேனாபதி யாகிய றப்பகை செற்று நெஞ்சில்
மேனாடுமி ரக்ஷணை வித்திவி ளைப்ப நாளும்
வானாடுபோற் றத்திறை கொள்ளும கேச வள்ளல். |
4 |
|
|
|
|
அந்தக்கர
ணங்களும் வாக்கு மகண்ட லோகத்
தெந்தச்செய லுமபிச காதிய லாத போதே
முந்துற்றறிந் துமுறை செய்யும்வர ரம்பில் ஞான
விந்தைப்பெரு மான்விபு தாதிபன் வேந்தர் வேந்தன். |
5 |
|
|
|
|
புனிதந்திரு
மேனிமு கந்திகழ் புண்ணி யங்கண்
தனிதந்தரு பேரரு ளம்புயஞ் சர்வ சக்தி
நனிதுற்றுமெய்ஞ் ஞானமு யிர்ப்புநீ தாச னத்தில்
இனிதுற்றுல காட்சிசெய் ராஜவி ராஜ னுக்கே. |
6 |
|
|
|
|
வல்லார்புக
ழும்புகழ்ச் சிக்கும தீதன் வானத்
தெல்லார்துதி தோத்திர வெல்லையி கந்து நின்ற
நல்லான்கணிப் பில்கரு ணைக்கடல் தோற்ற நாசம்
இல்லாதவ நாதிசு யம்புல கெங்கு முள்ளான். |
7 |
|
|
|
|
பெருமைத்திட
ரேறிய பிச்சுறு பேய்க்க ணத்தை
நிருமித்தசி றைத்தலை யுய்த்தக னீணி லத்தில்
இருமைக்குந லந்தரு மிரக்ஷணை யீட்டி வைத்த
தருமத்துரை யாயத யோர்ச்சித சக்க ரேசன். |
8 |