|
வென்றாழிந டத்திய றம்படு விண்ணு மண்ணும்
ஒன்றாகவி ரிந்துக விந்துயர்ந் தோங்கி யும்பர்
நின்றாதர முற்றிய தண்ணளி நீடு மொற்றைக்
குன்றாதகொற் றக்குடை வெண்மதி மேனி ழற்ற.
|
9 |
|
|
|
|
திருகார்வினை
சிந்திமெய்ந் நூன்முறை செய்யு நீதி
இருகூர்திகழ் பட்டய மின்விசித் திட்ட தென்ன
ஒருபாற்சுடர் விட்டொளி ரக்கிரு பாச னத்தின்
இருபாலருள் வெள்ளமெ ழுந்துல கொங்கு மல்க. |
10 |
|
|
|
|
பொதிரேறவி
சும்புநி றைந்தபுத் தேளி ராவார்
அதிபாரிசுத் தபரி சுத்தரென் றார்ப்ப ரிக்கத்
துதிதோத்திர கீதம லிந்திசை துன்னி யோங்கப்
பதிதோறண வும்மறை வாணர்பல் லாண்டு கூற. |
11 |
|
|
|
|
எங்குந்தொகு
பூதச ராசரத் தீட்ட மாதி
சங்கற்பவி கற்பமி லாதியல் சார்ந்து நின்று
துங்கப்பிர மாணவ ரம்பகச் சூழல் புக்குக்
கங்குற்பொழு துந்தவ றாநடை காட்டி யேத்த. |
12 |
|
|
|
|
முரசங்கறங்
கச்சுர மண்டல முந்து கீதப்
பிரசம்பொழி யத்திரு முன்றரு மம்பி றங்கப்
பரசங்கமல் கிப்பணி செய்து ராவி நிற்ப
அருகாசனத் திற்கும ரேசன மர்ந்தி ருப்ப. |
13 |
|
|
|
|
கண்ணோட்டமல்
குகவி னார்கரு ணாலயத்தின்
உண்ணாட்டுநீ தியொடு பேரரு ளொத்து லாவ
மண்ணாட்டவர் வாழ்த்தொலி யஞ்செவி வாய்ம டுப்ப
விண்ணாட்டர சன்றிருச் சந்நிதி வீறு மென்றும். |
14 |
|
அரசியற்படலம்
முற்றிற்று.
_________
|
|
|
|
|
|
வாக்கினுக்
சுதீத மான மகிமையின் வனப்பு வாய்ந்த
மேக்குயர் பரலோ கத்திவ் வித்தக வரசன் றம்மோர்
கோக்கும ரனுக்கென் றிந்தக் குவலயம் புதுக்கிச் செங்கோல்
ஆக்குவான் சித்தஞ் செய்த வநாதிநிண் ணயமொன் றுண்டால் |
1 |