|
கருத்துறு
கரும முற்றக் கருதியோர் வாக்கினாலே
உருத்திகழ் குவல யத்தை யோராறு திவசத் துள்ளே
திருத்தித்தங் குடைக்கீ ழாக்கித் தெய்விக குமரற் கீந்தார்
வருத்தமிங் கெவனோ வெல்லாம் வல்லசித் தருக்கு மாதோ.
|
2 |
|
|
|
|
மலைகடல்
ககன நாடு மதிகதிர் புனல்யா றோடை
நிலைமடு வாவி சோலை நிலவொளி மழைபல் பண்டம்
தொலைவிலாப் பயிர்வ ருக்கந் தொக்கபல் வளங்க ளெல்லாங்
கலைமதி மாந்தர்க் கென்றே கையளித் தனர்நங் கர்த்தன்.
|
3 |
|
|
|
|
பகுத்துணர்
வறிவு ஞானம் பரிசுத்த மகத்துப் பாக்யம்
உகுக்கரு மனச்சான் றின்ன வுவந்தினி தளித்து நஞ்சொற்
செகுத்திடா திருமி னென்னா ஜீவராக் கருளித் தேவ
மகத்துவ வரசன் வைத்தார் மாந்தரைப் புதிய வைப்பில்.
|
4 |
|
|
|
|
முன்னவ
னாதா மென்ற முதன்மனு மகனை நோக்கி
இந்நிலைத் துரிமை யெல்லா மீந்தன மெங்கோ லின்கீழ்
மன்னவ னாகி நீயே மனுமுறை வழுவா வண்ணம்
நன்னராண் டிருத்தி யுள்ள நலமெலாந் துய்த்தீண் டென்றார்.
|
5 |
|
|
|
|
உன்னத
வரசன் சொற்ற வுத்தரஞ் சிரமேற் கொண்டு
மன்னவன் மிருத்தி கேய னத்தினி யெனும்பூ மாதைத்
தன்னொரு மனைவி யாக்கித் தழுவிவீற் றிருந்தா னன்றே
பன்னரும் ஜீவ வர்க்கம் பணிபுரிந் தேத்த மன்னோ.
|
6 |
|
|
|
|
சேத்திரம்
புனித மாகச் சிந்தையும் வாக்குந் தேவ
தோத்திர மாகச் செய்கை சுகிர்தமே யாகத் தூய
பாத்திர மாகத் தேகம் படுபயன் றமதே யாகக்
காத்தொறு முலவி யுண்டு களித்துநாட் கழிப்பர் மாதோ.
|
7 |
|
|
|
|
ஒழுக்கமே
கலன்க ளாக வுடைபரி சுத்த மாக
இழுக்காறு கரும மேனிக் கிடுநறுஞ் சாந்த மாகப்
பழுக்குமன் பத்தி யன்ன பானமாப் பகல்க ளெல்லாம்
வழுக்கறு மரபிற் போக்கி மாதவம் புரிவர் நாளும்.
|
8 |
|
|
|
|
புத்திராஜ்
ஜியத்தி னாதி பூருவ குடிக ளாய
உத்தம ரரசன் சித்த முவந்தினி தடங்கி நாளும்
மித்தர ராகித் தூய விதிவிலக் கோம்பிப் பிள்ளைப்
பத்தியாய் வழிபா டாற்றிப் பவித்திர நெறியி னிற்பார்.
|
9 |