பக்கம் எண் :

486

 
ஐந்தாவது : இரக்ஷணிய பருவம்
 
   
 
தர்மக்ஷேத்திரப் படலம்
 
   
  உடலுயிர் கண்ணிமை யொத்த மாட்சியர்
படருறு மனந்தரின் படுகர் வைப்பையும்
நடலையர் பிரபஞ்ச நச்சு வாழக்கையின்
கடையையுங் கடந்துமெய் வாழவைக் கண்ணுற்றார்.
1
   
  பல்வளங் களுங்குழீஇப் பரம பாஷையின்
கல்வியுஞ் செல்வமுங் கவின்கொண் டோங்கிய
நல்வள நாட்டையூ டுருவி நம்பிரான்
மல்வள நகர்புகு மார்க்கஞ் சென்றதால்.
2
   
  புயணிரை பொதுளிய பொதும்ப ரும்பல
பயிர்வளஞ் செறிந் தெழில் படர்ந்த பாங்கரும்
வியனிலப் பரப்புநல் விரையுய் யானமும்
மயலறு காட்சியின் மயங்கு மாலது
3
   
  வானமும் பூமியு மிணைந்த மாண்பது
ஞானமும் நன்மையு நனிக தித்தது
தீனமு மீனமுஞ் சேர்வின் றாயதெவ்
வூனமும் பாவமு மொழிந்த நீரது.
4
   
  ஆரிய ரேகுடி யமையத் தக்கது
பூரிய ரவ்வழி புகப்பெறாதது
சூரியன் கதிரன வரதந் துன்னலால்
காரிரு ளெங்கணுங் காணொ ணாதது.
5