பக்கம் எண் :

487

  புனிதமே யெங்கணும் பொலியும் பொற்பது
தனிதமா ரருண்மழை பொழியுஞ் சால்பது
மனிதர்வா னவரென மருளத் தக்கது
நனிதவ வொழுக்கத்தி னலங்கொண் மொய்ம்பது.

6
   
  புண்ணிய நதிவளம் பொருந்து பொற்பது
தண்ணளித் தடங்களின் பெருக்கஞ் சான்றது
கண்ணிய பயிர்வளங் கவின்கொள் காட்சியின்
வண்ணமித் துணையென வகுக்கொ ணாதது.
7
   
  சீலமு மொழுக்கமுந் திகழ்ந்த செவ்வியிற்
பாலொடு தேன்கலந் தோடும் பாலது
ஞாலமுற் றுந்தொகூஉ நன்க ருந்னுஞ்
சாலவும் பயன்படுந் தகைமை சான்றது.
8
   
  கருமபூ மியின்கடைக் கண்ண தாயது
திருமலைச் சாரலோ டிசைந்த சீரது
மருமலி தருமலர்ச் சோலை வாய்ந்தது
தருமசேத் திரமெனப் பெயர்த ழைத்தது.
9
   
  அத்தகு சேத்திரத் தணிகொண் மாட்சியைச்
சத்திய நிலைபெறு தகைக்கண் ணாடியின்
பத்தியின் விழிக்கொடு பார்ப்பி னல்லது
வித்தரிப் புரையியல் விளக்கற் பாலதோ.
10
   
                     வேறு.
   
  இன்ன ணந்தகு பரமசா தனங்களோ டிசைந்து
மன்னு ஞானநல் வளந்தரு தருமசேத் திரத்தைத்
துன்னு மாத்திரத் தாரணக் கிழவராந் தூயோர்
பன்ன ரும்பர மானந்த பரவச ரானார்.
11
   
  பனிதி கழ்ந்தவண் புதுமலர்ப் பரிமளம் பரம்பித்
தனித மாமதுத் துளிபடு தண்டலைப் பரப்பில்
நனித வழ்ந்துலா நறுந்தென்றன் மெய்யுற நணுகப்
புனித ராயின ரிருவரும் பொன்னொளி மருவி.
12
   
  மாய மார்பிர பஞ்சத்து மயக்கினி மருவாத்
தூய சேத்திர மடைந்தன மாலெனத் தொழுது
மேய தோத்திரம் புரிந்தனர் விண்ணுல காளும்
நாய கன்னருட் டுணைமையை நன்றியோ டுள்ளி.
13