பக்கம் எண் :

488

  இனைய சீலராய் நன்னெறி பிடித்திரு வோருந்
தினைய னைத்துநோ வின்றியுள் ளதிசயஞ் சிறப்பத்
துனைவி னேகுழி வரம்பறு காட்சியைத் தொகுத்துப்
புனையும் வேதியன் றோழற்குக் காட்டினன் புகல்வான்.

14
   
  கூருற் றோங்கிய மதிவலோய் கொற்றவன் மகிமைச்
சீருற் றோங்கிய திருநக ரணித்துறுஞ் செயலால்
ஏருற் றோங்குபைம் பொன்மய வெழிலுருப் படைத்திப்
பாருற் றோங்கிய சராசரப்பகுதிகள் பாராய்.
15
   
  நிண்ண யந்திக ழுத்தம நிருமல வரசன்
தண்ண ளிப்பெருக் கார்வதித் தருமசேத் திரமென்
றெண்ண ரும்பல வளநிறைந் தெங்கணுமலிந்து
கண்ணெ திர்ப்படு காட்சியே தெரிப்பன காணாய்.
16
   
  என்னு யிர்க்கருந் துணைவவித் தலத்தவ ரெல்லாம்
மன்னர் கோமகன் குருதிநீ ராடிய மரபாற்
செந்நி றத்தபொன் னுருவொளி திகழ்ந்தமே னியராய்ப்
பன்ன ரும்மொழில் படைத்துள புதுமையைப் பாராய்.
17
   
  துனித விர்த்தருந் துணைபுரி தோழவித் தேயப்
புனிதர் வாய்மலர் பொழிதரு புதுமொழித் தேன்போல்
நனிதி கழ்ந்தமுந் திரிகையி னறுங்கொழுங் குலைகள்
கனித ரும்புது நறைவிரி காட்சியைக் காணாய்.
18
   
  உரவு நீர்நிலத் தருட்டிர வியம்பெற்ற வுரவோய்
இரவு மின்றுறு துயிலுமின் றாதலி னெங்கும்
புரவ லன்றிரு வடிக்கன்பு பொருந்திய புனிதர்
பரவ சத்துயில் விளைக்கின்ற புதுமையைப் பாராய்.
19
   
  உரம ளைந்தமெய் யுத்தம விந்நிலத் துரவோர்
கரவி லாதகம் புறமெங்கு முண்மையே கவினப்
புரவ லன்சித்தம் போற்புரி பினிதமாச் செயலாற்
பரம ராஜ்ஜியம் வந்துற்ற பரிசினைப் பாராய்.
20
   
  அற்பு மல்கிய வாருயிர்த் தோழநம் மருமைத்
தற்ப ரன்சுதன் பிராட்டியோ டுலவுவான் சமைத்த
விற்ப ழுத்தபைம் பொன்மலர்ப் பரிமளம் வீசுங்
கற்ப கச்செழுங்காவனத் தெழினலங் காணாய்.
21