|
மீயு
யர்ந்தவா னாட்டிள வாசன்வீற் றிருக்கத்
தூய பொன்னொடு மின்னையும் வெயிலையுந் தொகுத்து
மேய பன்மணி குயின்றுவிண் ணுறமிளிர்ந் தெங்கும்
பாயி ருஞ்சுடர் பரப்புமண் டபநிலை பாராய்.
|
22
|
|
|
|
|
நம்பர்
நாட்டிய நம்பிக்கை யுருக்கொண்ட நண்ப
இம்பர் நாட்டிய திருச்சபை யெனுமண வாட்டிக்
கும்பர் நாட்டிள வரசன்செய் யொப்புடன் படிக்கைக்
கம்பநாட்டிய திருமணப் பந்தலைக் காணாய்.
|
23 |
|
|
|
|
புரையின்
மெய்விக வாசவிப் புனிதசேத் திரத்தின்
தரையில் வந்துவந் தேகின்ற சாரண விபுதர்
விரைய லர்ந்தபொற் றாமரைத் திருமுக விளக்கங்
கரையில் பேரின்ப மகிழ்ச்சியைத் தெரிப்பன காணாய்.
|
24 |
|
|
|
|
ஞான
நண்பபொன் னகரணித் தெமக்கினி நவிற்றில்
வான கத்தர சன்றிரு வோலக்க மன்றில்
ஆன கத்தொனி யோடெழுமாரண கீத
கான கந்தரு வஞ்செவி மடுப்பன காணாய்.
|
25 |
|
|
|
|
எம்பி
யிந்நிலை யாடியி விணையில்பே ரின்பச்
செம்பொன் மாளிகை திருக்கடை திருநெடு வீதி
உம்ப ரோங்குகோ புரமகி மைத்திர ளுயர்ந்த
பைம்பொ னிஞ்சிமா நகருருக் காட்டுவ பாராய்.
|
26 |
|
|
|
|
என்ம
னக்கிளி யாய்சரு வேசுர நேசம்
நன்மை நற்குண நன்னடை நன்மனச் சான்று
தன்ம பாலனந் தயையன்பு சாந்தமென் றினைய
பன்ம ணித்திரள்புரைகுண நிதிகளைப் பாராய்.
|
27 |
|
|
|
|
தெள்ளி
யோயிந்தத் திவ்விய சேத்திர மெங்கும்
உள்ளு றப்பளிங் கெனத்தெளிந் துறுமணங் கமழும்
வள்ள வாய்மலர்ந் திகழ்விண்ட மதுத்துளி மல்கிப்
பள்ள நீரகத் தலர்முக வனசங்கள் பாராய்.
|
28 |
|
|
|
|
ஜீவ
நன்மையைத் தெரிந்துளந் திரும்பிய செய்யோய்
தேவ மைந்தனோர் சீர்த்தியைச் சேத்திர மடந்தை
ஆவ லிற்புனைந் தேத்திசை யாமென வணிகொள்
காவ கத்தெழு புள்ளொலி காட்டுவ காணாய்.
|
29 |