|
இனைய
யாவையும் வயின்றோறுந் தோழனுக் கியம்பிச்
சினைய லர்ந்தபூங் காவகச் செழும்பொழி னடுவண்
வனையும் பொற்றிரு மாமணி மண்டப மடுத்தான்
நினைவி னீங்கலா நம்பிக்கை யோடுமந் நிவிர்த்தன்.
|
30 |
|
|
|
|
திருக்கு
லாவுமம் முன்னிலிற் றிவ்விய ஜோதி
விருக்க மல்குமோர் சூழவில் வேதிய ரிருவர்
மருக்கு லாவிய மலர்செறி யசோகத்தை மருவி
உருக்கு மண்டபப் பொலிவுகண் டுவப்புட னிருந்தார்.
|
31 |
|
|
|
|
ஆய
போழ்தத்து வனபரி பாலக ரடுத்துத்
தூய யாத்திரைக் குறியினா லவர்நிலை துணிந்து
நேய நன்மொழ நிகழ்த்திநுந் நெறிக்கிடை நிகழ்ந்த
சேய காரியந் தெரிக்கென வேதியன் றெரிப்ப.
|
32 |
|
|
|
|
நன்று
கேட்டுளக் களிப்பொடு நாயகற் பரவி
நின்று செவ்வியீர் பிரபஞ்ச நிருவிசா ரத்து
மன்றி ருந்துமிவ் வளம்படு தருமசேத் திரத்து
முன்றில் வந்தனிர் திருவருண் மாட்சியே முற்றும்.
|
33 |
|
|
|
|
ஐயன்
மீரினித் துன்பமின் றாயினு மாண்டோர்
மையி ருட்படு மரணத்தை வான்முறை நீந்தித்
துய்ய வாயவக் கரைப்படிற் சுவர்க்கபே ரின்பங்
கைய தாகுமா லென்றுளங் கனிந்துரை யாடி.
|
34 |
|
|
|
|
வம்மி
னீண்டென மலர்க்கரங் கொளுவியுய் யானத்
தெம்ம ருங்கினு மிசைந்துள புதுமையைக் காட்டி
அம்ம வீதிதென் றமைவெலா மகமுறத் தெருட்டி
மம்மர் நீங்கிய மதிவலீர் கேண்மென வகுப்பார்.
|
35 |
|
|
|
|
மரும
லிந்தவிச் செழுமலர்க் காவொடு மலிந்த
தரும சேத்திரப் பகுதியுஞ் சருவலோ கேசன்
திரும கற்குரித் தாமிவண் செறிபலன் யாவும்
ஒரும னத்தயாத் திரிகருக் குரிமையா முரைக்கில்.
|
36 |
|
|
|
|
மறியுந்
தண்புனன் மடுவுண்டு நதியுண்டு வனையக்
கறையி லாதவெண் டுகிலுண்டு கவினணி யுண்டு
நறிய முப்பழக் கனியுண்டு தீம்பழ நறையும்
நிறைய வுண்டுபோ னகமுண்டிந் நிலத்தினி லெங்கும்.
|
37 |