பக்கம் எண் :

491

  தங்க மாளிகைத் தலமுண்டு தலைவனைப் பரவப்
பொங்கு மாதவப் புரையுண்டு புத்துரை திகழ்த்த
எங்கும் வேதியக் குழுக்களுண் டாதலி னெமரீர்
இங்கி ருந்துசின் னாட்கழி மின்னென விசைத்தார்.

38
   
  என்ற வின்னிசை வாசகஞ் செவிமடுத் திறும்பூ
தென்றி வேதிய ரிருவரு முவப்பொடங் கவர்க்கு
நன்றி கூறிவந் தனஞ்சொலி நயந்தினி திருந்தார்
துன்றுகற்பகச் சோலைவா யருந்தவச் சூழல்.
39
   
  புனித நீர்படிந் தாடுவர் பூந்துகில் வனைவர்
கனித னீர்மையிற் கடவுளைக் கைகுவித் திறைஞ்சி
இனிது போனக மருந்துவ ரின்னிசை பயில்வார்
துனித விர்ந்தன வரதமுந் தோத்திரம் புரிவார்.
40
   
  நந்த னத்தெழில் கண்டுகண் டுலவுவர் நாளுஞ்
சந்த னாடவிப் பொதும்பரிற் றடந்துயில் கொள்வர்
விந்தை யாய்ப்பல காட்சியை வியந்துளங் களிப்பர்
முந்தி ரிப்பழ நறையுண்டு தேக்குவர் முறையால்.
41
   
  நுன்னு மாதவக் குழுவொடு தோழமை கொள்வார்
பன்னு வேதிய ரோடுசம் பாஷணை பயில்வார்
பொன்ன கர்த்தொனி செவிமடுத் துளக்களி பூப்பார்
இன்ன வாறவண் வைகலோர் சிலகழிந் திடுங்கால்.
42
   
  உம்பர் மேயசீ யோன்மலை யுன்னத கீதம்
பம்பவேதிய னகத்துறை யாத்துமப் பன்னி
எம்பி ராணநே சரைத்தலைக் கூடுநா ளெதுவென்
றைம்பு லன்களு மயங்கிமெய் யவசமுற் றயர்ந்தாள்.
43
   
  தூநலந்திகழ் காதனோய் சுடச்சுடத் துய்க்கும்
பான லந்திக ழுணவெது மருந்திலள் பதைப்பாள்
கான வேடுவர் வலைப்படு மானெனக் கலங்கி
ஊன ளைந்ததன் னுயிர் துடித் துள்ளமுங் குலைவாள்.
44
   
  ஆசை நாயக னருளுரு வெளியினா லயர்வாள்
தேக லாவிய திருமுகத் தொளியகந் திளைப்பாள்
சீசி யிவ்வுடற் சுமையென்று தீர்வலென் றினைவாள்
நேச மாற்றரி தாய்மிக நெட்டுயிர்ப் பெறிவாள்.
45