பக்கம் எண் :

492

  உலகபாசங்க ளொழிந்துந்தம் முயிர்க்குயி ராகி
இலகுமாத்தும நேசர்பா லாசைமிக் கேங்கி
விலகி னேசபா சத்தினா விறுகுற விசிப்புண்
டலகி லாத்துமத் துயரடைந் தாக்கையுந் தளர்வாள்.

46
   
  அருமை நாயகன் மூட்டிய வசைநோய் தணியா
தெரிமு கத்துற்ற மெழுகென விளகியுள் ளுடைவாள்
திருமு கச்செவ்வி காண்குறுஞ் செவ்விநீ ளிதெனக்
கருமு கிற்றுளி காண்கிலாப் பயிரெனக் கரிவாள்.
47
   
  உத்த மந்திக ழன்புமிக் குயிர்க்குயிராய
வித்த கன்றிறத் தோங்கிய விரகதா பத்தாற்
சித்த சஞ்சலங் கதித்தலிற் றெருமர லுழந்து
பித்த ரிற்றிகைத் தலமரீஇ மருண்டுபே துறுவாள்.
48
   
  பண்டு பாரிடச் சூழலின் மாதவிப் பாங்கர்க்
கண்டு நெஞ்சையுங் கருத்தையுங் கவர்ந்துடன் மணந்து
கொண்டு வந்தொரு குறியிடத் துய்த்தருட் கனிவாய்
விண்ட மெய்த்திரு வாக்கெலா நினைந்துவெய் துயிர்ப்பாள்.
49
   
  எது செய்குதி ரென்னொரு நேசர்பா லெனக்காங்
காத னோய்க்கொரு மருந்துமுண் டோவர் கனிவாய்ப்
போது மல்குபுத் தமுதலா லென்றகம் புலந்து
மீது மீதெரி தவழ்ந்தென வெந்துபுண் படுவாள்.
50
   
  அழுத னெட்டுயிர்த் தழுங்குதல் சோருத லாவாவி
எழுதல் வீழுத விரங்குத விருகரங் கூப்பித்
தொழுத லாதிய றொழிலலாற் றொழிலின்றித் துயர்வாள்
உழுவ லன்பினிற் கொடிதியா துவரிசூ ழுலகில்.
51
   
  மீக்கி வளர்ந்தெழு காதலால் வெவ்விடர் பழுத்த
தீக்கொ டுஞ்சிறை மீட்டுமென் னாயகன் செறுக்கும்
ஆக்கை வெஞ்சிறை மீட்டெனை யாணைக்கில ரென்னாக்
கூக்கு ரற்படுத் தழுங்கித்தன் னாருயிர் குறையும்.
52
   
  இருண்ட பாதலப் படுகர்நின் றெடுத்தபே ரன்பை
உருண்ட சிந்தையின் மறந்தன னாலென வுள்ளித்
தெருண்டென் னாயகன் வரவிடு தூதொன்று சேரின்
மருண்ட புன்மைபோய் மாறுமென் றொருநிலை மதிக்கும்.
53