|
அன்பு
லப்பிலா னடித்தொழும் பாற்றுதற் குதவாப்
புன்பு லாலுடற் பொறைசுமந் தெத்தனை பொழுது
மன்பு விப்பொறை யாய்த்திரி வேனென மயங்குந்
தன்புலப்பகை யவித்தயோ கியர்நிலை சாரும்.
|
54 |
|
|
|
|
வேறு.
|
|
|
|
|
|
பன்ன
ரும்பா லோகப தவிநீத்
திந்நி லத்துவந் தெய்திய வீசனார்
மன்னு மன்பும யத்திரு மேனியை
உன்னி யுன்னித்தன் னுள்ளமு ருகுவாள்.
|
55
|
|
|
|
|
துருவி
வந்தெனைத் தொண்டுப டுத்தவும்
பொருவில் பேரின்ப போகத்தை யூட்டவும்
பருவ ரற்கட னீந்திய பான்மைநெஞ்
சுருவு கின்றதென் றாவியு யங்குவாள்.
|
56 |
|
|
|
|
தீங்கு
மல்கிய தீக்கடன் யாவையுந்
தாங்கி நின்றுத்த ரித்தெனைத் தாங்கியன்
போங்குகாதல ரூடினர் போலுமால்
நீங்கு மாறினி யென்னென நேடுவாள்.
|
57 |
|
|
|
|
பரதி
ரித்துவ வேந்தன்ப ணிப்படி
வரதன் வைதிக மாட்சிவ ரன்முறை
விரத நோன்புபி டித்திடும் வித்தக
சரத மெண்ணித்த விப்புறு நீர்மையாள்
|
58 |
|
|
|
|
ஒரும
லைச்சிக ரத்தொரு மூவருக்
கிருநி லத்துச்சு டருமி ரவிபோல்
தரும ஜோதித ழைத்திடக் காட்டுமத்
திருமு கச்சுட ருள்ளித்தி யங்குவாள்.
|
59 |
|
|
|
|
சுத்த
மாக்கிவெண் டூசணி நல்கித்தம்
முத்தி தந்தின்ப மூட்டிய காதலர்
வித்த கக்கனி வாயிதழ் விண்டசொற்
றித்திக் கின்றதென் சிந்தையுணின் றென்பாள்.
|
60
|
|
|
|
|
கள்ள
மின்றவர் கட்டுரை யாயினும்
உள்ள முற்றுமு ருக்கிக்க வர்ந்துடன்
கொள்ளை கொள்ளுங்கு ணமுடைத் தென்றுகண்
வெள்ளந் தோய்ந்தும்வெ துப்புறு மேனியாள்.
|
61
|