பக்கம் எண் :

494

  சேவ டித்துணை நேரவத்தி சைதிசை
ஆவ லித்தெனைத் தேடிய வன்புளார்
கூவிக் கூவிவி ளிக்கக்கு றிக்கொளார்
பாவி யேன்பிழை யேயென்று பன்னுவாள்.
62
   
  விண்க லக்கும்வி ழுநெறி வீசியிம்
மண்க லந்தம யலளைந் தோங்கிய
எண்க லந்தவெ ருசலைக் காயிரு
கண்க லுழ்ந்தக ருணையை யுன்னுவாள்.
63
   
  பொற்பி னாருயிர் பொன்றுடல் கூடவும்
உற்ப வத்தினு டற்குறை நீங்கவும்
பற்பல் வெம்பிணி தீரவும் பாலித்த
அற்பு தச்செய லுன்னிய ழுங்குவாள்.
64
   
  வருதி னத்தும ணத்தொழின் முற்றுவான்
குருதி வேர்த்துளி மேனியிற் கோத்துகத்
திருவு ளத்துத்தி ருந்தணி செய்தசீர்
கருதி யாவிக ரைந்துக லுழுவாள்.
65
   
  மெய்ச்சி ரத்தையிற் பாசம்வி சிக்கமெய்
பச்சி ரத்தஞ்சொ ரியப்ப தகர்முன்
நச்சு முண்முடி தைக்கந விவுறும்
உச்சி தத்தனி நேசத்தை யுன்னுவாள்.
66
   
  குறும னக்கொடி யார்செய்கு ரூரமுஞ்
சிறுமை யும்புகல் தீச்சொலுந் தாங்கியத்
தெறும கத்துவர் சிந்தைசி னந்திடாப்
பொறுமை யுள்ளிப்பு கைந்துபு லம்புவாள்.
67
   
  விருண மேனியில் வெவ்விருப் பாணிசொல்
தருண மற்றிவர் தம்பிழை யோர்கிலர்
அருண யந்துமன் னிக்கவத் தாவெனுங்
கருணை யுள்ளிக்க சிந்துக லுழுவாள்.
68
   
  ஞால மேவுநராத்தும நாயகன்
ஓல மார்குரு சொண்மட லூர்ந்தருட்
சீல மாகத்தி ருத்துதி ருமணக்
கோல முள்ளிக்கு ழைந்துளந் தேம்புவாள்.
69