|
செயிர்த்த
சிந்தையத் தெவ்வர்தி கைக்கவும்
அயிர்த்த தொண்டருக் காருயிர் மல்கவும்
பயிர்த்த பூம்பணைப் பள்ளிநின் றாண்டகை
உயிர்த்தெ ழுந்தமை யுள்ளியுள் ளூக்குவாள்.
|
70 |
|
|
|
|
ஆழி
யான்வலப் பாகத்த மர்ந்துளார்
வாழ வாழியென் றேத்தினும் வைகலோர்
ஊழி யாகத்தி கைத்துள்ளு டைந்தனள்
ஏழை யாத்துமப் பன்னியிங் கென்பவே.
|
71 |
|
|
|
|
ஈது
காலத்துன் னான்மவி ரக்ஷகர்
காத லித்துன்ப லன்களுங் கைக்கொடிங்
காத ரித்தடுக் கின்றன ராலெனக்
கோதில் சீயோன்கு மரிக்குக் கூறுமின். |
72 |
|
|
|
|
என்றொர்
சத்தமெ ழுந்தது விண்ணிடை
மன்றன் மங்கள மல்கிய பொன்னகர்
முன்றி னின்றுமு ழங்கிமு றைமுறை
துன்றெக் காளந்தொ னித்திடு மாறுபோல்.
|
73 |
|
|
|
|
வானின்
றுள்ளத்து வார்ந்தநல் வாக்கெனுந்
தேனுண் டார்ந்தன ளாத்துமச் சொல்வியும்
ஊன ளைந்தவு டற்றுயில் வீசினான்
ஞான மல்கிய மெய்ம்மறை நாவலன்.
|
74 |
|
|
|
|
குருசு
யர்த்தகு ரிசில்வ ருகையின்
பரிசு ணர்ந்துநம் பிக்கையும் பண்ணவ
தரிச னைக்கரு காயது தம்பிரான்
புரிசை மாநகர் போதுவம் யாமென்றான்.
|
75 |
|
|
|
|
நன்றெ
னாவிரு வோருந றும்பொழின்
மன்று ளார்விடை பெற்றுவந் தித்துடன்
சென்று கூடினர் செவ்விய நூனெறி
என்று மாறிலி றைவனை யேத்தியே.
|
76 |
|
|
|
|
இத்த
கைப்படு சம்பவம் யாவுங்கை
உய்த்த நெல்லிக்க னியிலு ணர்ந்தியான்
வித்த கர்ப்பின்றொ டர்ந்து விளைவினி
எத்தி றத்ததெ ரிவலென் றேகினேன்.
|
77
|