பக்கம் எண் :

496

  மங்க ளஞ்செறி மாநகர் நோக்கிமன்
சிங்க வேறோரி ரண்டுடன் சென்றெனக்
கங்கு லின்றிக்க திர்படு கானகப்
பொங்க ரூடுநடந்தனர் போயினார்.

78
   
  சென்னெ றிக்கெதி ராயிரு சீரியோர்
பொன்னி னாயவு டையினர் பொற்புறு
மின்னொ ளிக்கதிர் வீசுமு கத்தினர்
முன்னர்த் தோன்றிமொ ழவர்மு றைமையால்.
79
   
  எங்கு ளீரிந்நெ றிக்கிடை யெங்கெங்கு
தங்கி வந்தனிர் சார்ந்தவி பத்தெவை
அங்கங்குற்றவருட்செயல் யாவெலாம்
இங்கே டுத்துரை மின்னென்றி யம்பலும்.
80
   
  திருவு ளத்தருட் செவ்வியி தாமெனா
இருவ ருந்தஞ்ச ரிதத்தி யல்பெலாந்
துருவி யாதிதொ டுத்தங்கி றுவரை
பரிவி னோடும்ப கர்ந்தனர் பண்பினே.
81
   
  வந்தி றுத்தமரபும றையவர்
சிந்தை யின்பரி பாகமுந் தெள்ளிதின்
அந்த ணுளர றிந்தரு ளாண்டகை
விந்தை யின்செய லேத்திவி ளம்புவார்.
82
   
  தொக்க பேரிடர்ச் சூழல கன்றிவண்
புக்கு வந்தனிர் தெய்வப்பு ணர்ப்பினால்
விக்கி னப்புத ருண்டினி மேற்கொளின்
மிக்க பேரின்ப வீட்டுல கெய்துவீர்.
83
   
  ஐயன் மீர்நும்ம வாவின்வ ழித்துணை
செய்ய வுத்தர மின்றுதி ருந்துநுந்
துய்ய மெய்விசு வாசத்து ணிபினால்
வெய்ய துன்பினை மேற்கொள வேண்டுமால்.
84
   
  திரித்து வப்பரன் றிவ்விய வாக்கையுட்
கருத்தி ருத்திக்க லங்கலி ராய்வரும்
வருத்த மூடறுத்தேகிவ ரம்பிலின்
பருத்து பாங்கர டைகுதி ராலென்றார்.
85