பக்கம் எண் :

497

  அஞ்ச லித்துவ ரன்முறை யாரியர்
செஞ்செ வேவழி பற்றினர் திவ்விய
கஞ்சு கத்தரி ருவருங் காட்சிவிட்
டெஞ்சு றாதங்க வரொடு மேகினார்.

86
   
                    தர்மக்ஷேத்திரப் படலம் முற்றிற்று.  
     
 
இகபரசந்திப் படலம்
 
 
     
  வித்தகந் திகழு மான்ம விசாரிநம் பிக்கை யென்ற
உத்தம ரிருவர் ஜீவ சரிதத்தை யொருவா றாக
இத்தகைத் தென்று சொற்றா மினிவரு மரண நீந்தி
முத்திராஜ் ஜியத்தை யுற்ற முறைமையை மொழிது மன்றே.
1
   
  பகலொளி சதாநின் றோங்கும் பவித்திர தேசாந் தத்தில்
இகபர சந்தி யென்னு மிடரிருட் பிழம்பு தொக்கங்
ககவயிற் கடுகிச் செல்லு மடுதிரை மரண வாற்றைக்
ககனயாத் திரிகர் தத்தங் கண்களிற் றெரியக் கண்டார்.
2
     
  கண்டுடன் மனமுங் கண்ணுங் கலங்கினர் கவன்றா ரேனும்
உண்டெமக் குறுதி யென்னா வுள்ளுளே யூக்கித் தொண்டர்
மண்டலம் புரந்த ஜேசு மலரடிப் புணையைப் பற்றி
எண்டகு தேவா ரங்கொண் டிசைத்தனர் பிணிப்பார் நெஞ்சில்.
3
     

      தேவாரம், கடைக்கணி. (பண்,இந்தளம்.)
   
1. பரனேபரம் பரனேபரப் பொருளேபரஞ் ஜோதீ
உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்
பெருமானடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்
சரணாடிவந் தடைந்தேனொரு தமியேன்கடைக் கணியே.
 
2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக்
காலத்தையுங் கழித்தேனுயர் கதிகூட்டும்ர க்ஷணிய
மூலத்தனி முதலேகடை மூச்சோயுமுன் முடுகிச்
சீலத்திரு முகத்தாரொளி திகழக்கடைக் கணியே.
 
3. தொடுவீரையின் மணலைத்துளி துளியாக்கிமுன் னீரை
இடினுங்கணக் கென்றீவினைக் கின்றேகணக் கெந்தாய்
படுபாவியென் றெள்ளாதெனைப் பரிவாய்மன்னிப் பருளி
நடுநாளுன தடியாரொடு நணுகக்கடைக் கணியே.