4. |
அன்பார்கலி
யருண்மாமழை யதடியார்க்கன வர
இன்பார்தரு கிருபாநிதி யிரக்ஷண்யபுண் ணியக்குன்
றுன்பாற்சரண் புகுந்தேனெனை யொறுக்காயகத் தொளிதந்
தென்பாற்பிழை பொறுத்தாதரித் தெந்தாய்கடைக் கணியே.
|
|
|
5.
|
பெற்றாருடன்
பிறந்தார்தமர் பெண்டீர்மக்கள் பெருநட்
புற்றாரினு முற்றார்சில ருலந்தாருயி ருலக்கப்
பெற்ரேனல னென்னோதிரு வுள்ளம்பெரு மானே
நற்றாயினு மினியாயுனை நாடக்கடைக் கணியே.
|
|
|
6. |
மரணாந்தவல்
லிருண்மூடிமெய் வசமற்றுயிர் மறுகிக்
கரணங்களும் பொறியாதியுங் கலங்கித்திகைத் தயருந்
தருணங்கிறிஸ் தரசேயெனை யஞ்சேலெனத் தாங்கும்
அரணம்பிறி திலையேயுனை யல்லாற்கடைக் கணியே.
|
|
|
7. |
அந்தக்கர
ணத்துள்ளன வறிவாயடி யேனில்
எந்தக்குறை யுளவென்னினு மெந்தாய்பொறுத் திரங்கிச்
சிந்தைக்கவ லையுந்தீர்த்தெனைத் திருத்திக்குணப் படுத்தி
அந்தத்திரு சரணீழல்தந் தருளிக்கடைக் கணியே.
|
|
|
8.
|
கோதார்குணக்
கேடன்மிகக் கொடியன்கொடும் பாவி
எதாகிலு நன்றொன்றில னெனினும்புறக் கணியா
தாதாரசர் வேசாவன வரதாவரு ணாதா
பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப் பரிவாய்க்கடைக் கணியே.
|
|
|
9. |
ஓசைக்கடற்
புலிக்குன்ளெனை யொப்பாரொரு பாவி
ஆசைக்குமி ராரென்பதென் னகங்கண்டறி யுண்மை
ஈசற்கொரு புதல்வாவெனக் கிரக்ஷண்யபுண் ணியனே
பாசத்தளை விடுத்தெற்கருள் பாலிகடைக் கணியே.
|
|
|
10. |
ஒன்றுயொரு
மூன்றாயொரு மூன்றும்மொரு முதலாய்
நின்றாயிது பரமார்த்தநிஷ் சருஷமிந்த நெறியை
நன்றாய்ந்துளந் திரும்பியுனை நாடிற்கதி நாடும்
என்றாயுனை யாடைந்தேனெனக் கிரங்கிக் கடைக்.
|
|
|
12 |
.பேராதர
முடையாய்பெரி யோனேபெரு மானே
பாராதரித் துயிரீந்திர க்ஷணையீட்டிய பரனே
ஓராதர முனையன்றிலை யுயிர்போம்பொழு துடன்வந்
தாராதரம் புரிவாரெனக் கையாகடைக் கணியே.
|
|
|
13. |
கிருபாகர
கருணாகர கிளர்புண்ணியப் பொருப்பே
பெருமாவடி யேன்செய்பிழை பொறுத்தென்னுயிர் பிரிகால்
மருவார்தரு குருசிற்றிகழ் வதனாம்புஜ மும்முன்
திருநாமமந் திரமும்மகந் திகழக்கடைக் கணியே
|
|
|
|
தேவாரம்
முற்றிற்று. |