பூதலம்
புரிந்த பாவப் புயல்பரந் திருண்ட நித்ய
வேதனை யுததி மொண்டு விழுத்தநீர் வெள்ளம் பொங்கிப்
பேதைமா னிடத்தை யேனைப் பிராணியை மோதி யீர்த்துப்
பாதலப் படுக ருய்க்கும் பாதக மரண கங்கை.
|
4 |
|
|
ஏதெனென்
றுரைக்க நின்ற வெழினறுந் துணர்ப்பூங் காவின்
ஆதியிற் றோன்றி யென்றும் மவனியைச் சூழ்ந்து லாவி
வேதனைப் பயிரை யோம்பி விநாசத்தை விளைத்து நித்ய
மாதுயர்க் கடலில் வீழ்ந்து மறிவது மரண கங்கை.
|
5 |
|
|
ஆசையிற்
பெரிது வஞ்சத் தாழ்ந்தது துன்பந் துக்கம்
மூசிய விடரி வற்றின் முறிதிரை புரளு நீர்த்து
மாசடையிதயம் போல மலிந்திருள் குழுமி மல்கு
பாசடை மலின மூடிக் கலங்கிய பான்மைத் தம்மா.
|
6
|
|
|
தாங்கரும்
பிணிக ளாய சலசரம் பயில்வ தியாண்டும்
ஓங்குதீ வினைக ளாய படர்கொடி யுறழ்வ தூக்கிப்
பாங்கரிற் காளி கூளி பைசாச கணங்கள் புக்கு
நீங்கரி தாகி நின்று நெடுந்திகில் விளைக்கு நீர்த்து.
|
7 |
|
|
பள்ளநீ
ருலக மெங்கும் பகைகொளக் கரந்து வைகிக்
கொள்ளுநன் மருந்தை யெல்லாங் கூட்டுண்டு குணங்கொ டாமே
உள்ளுறப் பரவி யொல்லை யுயிர்வதைத் தொருங்கு கொல்லுங்
கள்ளவெவ் விடவ ராவிற் கிடந்தது மரண கங்கை.
|
8 |
|
|
அடுத்துழி
யழுகை மல்க வயலெலா நடுங்கி யஞ்சக்
கடுத்துற மனம்போற் சற்றுங்கண்ணோட்ட மின்றி நாட்டைக்
கெடுத்தழித் தலைவு செய்து கெழுமிய வனைத்துந் தீவாய்
மடுத்திடுங் கொடுங்கோல் வேந்தை மானுமான்மரண வாரி.
|
9 |
|
|
நினைத்திரா
வேளை வந்து நிலத்திடை யீட்டி வைத்த
அனைத்திரு நிதியும் வாரி யாருயிர்க் கழிவு செய்து
மனைத்தலை யிழவுண் டாக்கி மறைந்திடு மரபிற் கள்ள
வினைத்திறம் புரியும் வெய்யர் போல்வதம் மிருத்து நீத்தம்.
|
10 |
|
|
நாளென
வரம்பு காட்டி நரலைவா ரிதிசூழ் வைப்பிற்
கேளுறு முயிருக் கொல்லா நன்றுபோற் கேடு சூழ்ந்து
வாளெனப் பிளந்து தள்ளி மாயமாக் குறைக்கும் வாணாட்
கோளுறு காலத் தோடு கூட்டுற வாமிந் நீத்தம்.
|
11 |