|
காலத்தைக்
கருதி நின்றுட் பகையாகிக் கலக்கங் காட்டிக்
கோலத்தைக் குலைத்துக் கோறிக் கூரிருட் சூழ லுய்த்து
ஞாலத்தைக் கெடுக்கும் பொல்லா நச்சுத்தீ யலகை யேபோற்
சாலத்தை விளைக்கு மிந்தச் சதிபுரி மரண கங்கை.
|
12 |
|
|
|
|
தேகதத்
துவங்கள் குன்றுஞ் சீர்கெடு மையஞ் சேருஞ்
சோகமாம் பொறிபு லன்கள் சுழன்றந்தக் கரண மாயும்
ஆகமுங் கிடையா மேலிட் டாருயி ரொடுங்கு மந்தோ
மோகமா மரண கங்கை யூடுற முடுகுங் காலை.
|
13 |
|
|
|
|
பாபத்தை
விளைத்தோர்க் குற்றபயிரிடுங் கூலி தேவ
கோபத்தின் மிகுதி யிந்தக் குவலயத் தெவர்க்கு நீங்காச்
சாபத்தின் சமைவு மோசச் சற்பனைக் கிடங்கு மாய
ஆபத்தின் குகையா மிந்த வறக்கொடு மரணச் சூழல்.
|
14 |
|
|
|
|
கெடுமதி
வித்திற் றோன்றி யிச்சையிற் கிளம்பிப் பொல்லாக்
கடுமனத் தெழுமூ வாசைக் கவடுவிட் டஞராய்ப் பூத்துக்
கொடுவினைத் திரளைக் காய்த்துக் குலவிய பாவ தாருப்
படுபழங் கனிந்த சாறிப் பயங்கெழு மரண நீத்தம்.
|
15 |
|
|
|
|
புரணபுன்
ணியரே யார்க்கும் புகலிட மவர்பொற் பாத
அரணத்தைத் தேடித் தம்மை யடைக்கலப் படுத்தி யந்தக்
கரணவிந் தியங்க ளோடு காயத்தைப் புனிதமாக்கி
மரணத்தை நினைத்து வாழா மாந்தரே மாந்த மாந்தர்.
|
16
|
|
|
|
|
பழிபடு
மரண வாற்றைப் பாரித்துப் பகர்வ தெங்ஙன்
சுழிபடு மலைவாய்ப் பட்ட துரும்பெனத் துறைக்குண் மூழ்கி
அழிபடு ஜீவ ரேயவ் வவஸ்தையை யறிவ ரன்றி
மொழிபடு வனவிப் பாங்க ருத்தேச முறைமைத் தாமால்.
|
17 |
|
|
|
|
ஆயுளுக்
கெல்லை யாயு மவனிக்கோ ரந்த மாயும்
மீயுயர் கதிவா யிற்கு மிகவணித் தாயு மூடே பாயுமம்
மரண வாற்றின் படுகரை யடுத்தங் குற்றர்
நாயகன் பதத்தை நாடுக லந்திகழ் மறைவ லாளர்.
|
18 |
|
|
|
|
அவ்வயி
னொளிகோ டூத ராரணர் தம்மை நோக்கி
இவ்வரை காண்மின் சொற்ற விகபர சந்தி யாய
பௌவமற் றிதனை நீந்தி யக்கரைப் படுகி லீரேல்
திவ்விய நகர வாயிற் சேர்ந்திடப் பெறுவீ ரல்லீர்
|
19 |