பக்கம் எண் :

502

  உத்த மந்திக ழொண்மதி படைத்தநம் பிக்காய்
மெத்த வாழ்கயத் தமிழுகின் றனன்றலை மேலாய்த்
தத்து பேரலை புரண்டெனை மூடுமாற் றரிப்பின்
றெத்தி றம்மினிக் கடைப்பிடித் துய்வலென் றிசைப்ப.
28
   
  என்னை யென்னைநீ கலங்குதி திடங்கொண்டமற் றெந்தாய்
நன்ன ரென்னிரு கால்சளு நனிதரிப் பனவால்
முன்ன ரேகிரு பாஸ்தமுண் டிங்ஙன முடுகிப்
பன்ன ருந்திரு வடித்துணை பற்றெனப் பகர்ந்தான்.
29
   
  புந்தி யுற்றநம் பிக்கைசொற் கேட்டுமெய்ப் போத
அந்த ணன்னென தாருயிர்க் கருந்துணை யாய
மைந்த பாவியே னுயிர்க்குறு மரணபந் தங்கள்
தொந்த மாய்ப்புடை விளைந்துசூழ்ந் தனவிங்கு தூயோய்.
30
   
  ஊணு வட்டுபால் தேனொடு பெருக்கெடுத் தோடும்
மாண ரும்புது வாளஞ்செறி மங்கல நாட்டைக்
காணி யாக்குவான் கருதினன் காணவுங் கிடையேன்
கோணி லாவுமிந் நதியிடைக் குப்புறீஇ யென்றான்.
31
   
  முயங்கு காரிருட் படலமவ் வொல்லையின் முடுகப்
பயங்க ரங்களுந் துன்பமு மேக்கமும் பற்ற
இயங்கி டும்பொறி புலன்களு மிருண்டுணர் வினைய
மயங்கி னானந்தக் கரணமு மாரியன் மாழ்கி.
32
   
  செய்த பாவங்க னினைந்துளந் தேம்பின னெனவும்
வெய்து துன்பமே லிடுதலின் விழுத்தகு முளத்தில்
எய்து மாறுத லெடுத்தினி தியம்பில னெனவும்
மெய்தி கழ்ந்தமுன் மொழிகளால் விளங்கிட வறிந்தேன்.
33
   
  ஆரி யன்றளர்ந் தயர்வுழி நம்பிக்கை யடுத்து
நீரி லேதலை நிமிர்த்துமூச் சியங்குற நிறுவிக்
கூரி யோய்கரை யணித்தெனப் பன்முறை கூவிச்
சீரி யோன்சிறி துணர்வுறத் தெருட்டுவா னானான்.
34
   
 

வெய்ய வன்றனை மின்மினி யாக்கிவிண் மிளிருஞ்
செய்ய பொன்னக ரலங்கமுந் திருக்கடைச் சிறப்புந்
துய்ய ரோர்சிலர் நந்தமைக் கூட்டுவான் சுலவிக்
கைய தாகிய காட்சியுங் காண்டியீண் டென்றான்.

35