பக்கம் எண் :

503

  ஒல்லை யாரிய னுத்தம தோழநிற் கூட்ட
வல்ல தூதுவர் வந்தணை கின்றனர் வாய்மை
நல்லை யென்றுநீ நம்பிக்கை நம்பிக்கை யேயிவ்
வல்ல லாற்றையு மாழமின் றாக்கிய தென்றான்.
36
   
  ஆரி யன்சொல வையநீ மெய்விசு வாசச்
சீரி யைந்துளை நின்னுழைத் தோன்றிய சிறியேன்
பேரி யைந்தென னாதலிற் பிறன்கொலோ பெறும்பே
றோரி லந்தண பேதமென் னெம்மிலென் றுரைத்தான்.
37
   
  எம்பி தேர்தியா னுத்தம ஜீவிய னென்னில்
நம்பி ராரெனைக் கைவிடு வார்கொனட் டாற்றில்
இம்ப ரென்பெரும் பாவத்தி னிமித்தமே யென்னை
வெம்பு மிக்கொடு மரணத்துள் விடுத்தன ரென்றான்.
38
   
  உத்த மாரிய வுணர்திநம் போலுல கருக்குச்
சத்து ருக்களின் பயமிலை சாவின்வே தனையும்
அத்த னைக்கிலை யெனுமறை யாதலி னடியார்க்
கெத்த னைக்கரும் பாடுக ளுள்ளன வெண்ணாய்.
39
   
  மெய்வி டுத்திடா வித்தக வெவ்விய மரணத்
துய்வ ளிக்குநின் மெய்விசு வாசத்தி னுரத்தைத்
தெய்வம் பாங்கர்நின் றறிதிற னல்லது தீரக்
கைவி டுத்தமை யன்றிது பரீக்ஷிக்குங் கணக்கால்.
40
   
  எந்தை நீதிடங் கொள்ளிதோ வெங்கிறிஸ் தியேசு
வந்த ணைந்தன ரெம்முறு நோயெலா மாய்த்து
விந்தை யாயசிற் சுகந்தர வென்றனன் விளித்தான்
அந்த ணாளனுந் தலையெடுத் தாருயி ரடைந்தான்.
41
   
  மண்டு நீர்க்கயத் தாழ்ந்துணர் வழிந்துயிர் மாயக்
கண்டு நம்பிரான் றிருப்பெயர்த் தொனியுளங் கவின
விண்டு நித்திய ஜீவனை யூட்டிய விதத்தில்
தொண்ட ருச்குயிர்கிறிஸ்துவே யெனுமுண்மை துணிந்தாம்.
42
   
  பாவ ஜீவரைப் பவித்திர மாக்கியீ டேற்றுந்
தேவ மைந்தனாங் கிறிஸ்துவின் றிருப்பெய ரொன்றே
ஆவி நீங்குவோர்க் கூட்டிடு மருமருந் தாய
ஜீவ தாரக மந்திர மென்பதுந் தெளிந்தாம்.
43