பக்கம் எண் :

504

  திட்ப நூன்மதி யோயிங்கென் ஜீவநா யகனை
விட்பு லத்தர சன்றிரு மைந்தனை விளங்கக்
கட்பு லத்தெதிர் காணுகின் றனனெனக் கசிவுற்
றுட்பு லங்குவிந் தேத்தினன் கைதலை யுயர்த்தி.

44
   
  அஞ்ச லஞ்சனீ யானுனை மீட்டன னன்றே
எஞ்சு றாப்பெயர் தரித்தனன் யானுனக் கிதனாற்
செஞ்செ வேயெனக் குடையைநீ செல்லுழி யெங்குந்
தஞ்சம் யானுனக் குன்னுட னிருப்பதுஞ் சரதம்.
45
   
  நதியிற் செல்லினு நடுங்கலை நடுக்கலை யமையுங்
கொதிய ழற்கிடை நடப்பினுங் கொளுத்திடா துன்னை
அதிப னாகிய வாண்டகைத் தெய்வமு நினக்குக்
கதிந லந்தரு மிரக்ஷணைக் கடவுளும் யானே.
46
   
  என்று தம்பிரா னுரைத்தமெய் வாக்குளத் தெழுலும்
நன்று ரங்கொடு நம்பிக்கைக் கிவ்வுரை நவிற்ற
அன்ற லர்ந்தவா ரிசமென வகமுகங் கவினி
நின்றுரத்தன ரிருவருந் திடங்கொண்டு நிமிர்ந்தார்.
47
   
  இகலெ லாம்புற மிட்டன விருட்பிழம் பிரியப்
பகலொ ளிச்சுடர் திகழ்ந்தது பாரடிப் படுத்தி
ஜெகமி ருத்துவா நதியினைத் தீரமோ டுருவிப்
புகரின் முத்தியங் கரைபிடித் தேறினர் புலவர்.
48
   
  வெங்கொ டும்பசி தாகம்வன் பிணியிடர் மேற்கொள்
அங்கி யென்றிவை யாவையு மாற்றொடு போக்கித்
துங்க மேனிபொன் னுடைபர மானந்தந் துதைய
மங்களக்கரை யேறினர் வழுவிலா மறையோர்.
49
   
  பத்தி யோவிசு வாசமோ பகருமெய் யன்போ
சித்த சுத்தியோ சற்கரு மத்தினோர் திறனோ
முத்தி யின்கரை பிடித்தது யாதெனின் மூலம்
அத்த னைக்குநம் மாண்டகை கிருபையே யாமால்.
50
   
  பொருளும் பெண்டிரு மக்களும் பூகலத் துறவும்
மருளு றுத்துவெம் பிணிகரை யுடலொடு மறியும்
அருடந் துய்த்தநம் பிக்கையே யாருயிர்த் துணையாய்த்
தெருளு றுத்திநின் றுன்னத பதவியிற் சேர்க்கும்.
51