பக்கம் எண் :

505

ஆன்ற வேதிய னகத்துவிஸ் வாசத்தை யாக்கி
ஏன்று ஜீவபா தையிற்செல விடுத்தது மிடையே
ஊன்று நம்பிக்கை யுருப்புனைத் துருப்படுத் தியதும்
மூன்றொன் றாகியதைவிக கிருபையே முற்றும்.
52
ஜீவ முத்தியங் கரைபிடித் தேறிய செல்வர்
மேவு பேரின்ப தலம்புக்க விந்தையை யுள்ளித்
தேவதேவப ராபர திரித்துவ தேவை
ஆவ லிற்றுதித் தன்பொடு போற்றுவா னமைந்தார்.
53

தேவாரம். (போற்றித் திருவிருத்தங்கள்.) (பூர்வ கருதி.)
1. ஆதிமத் யாந்த ரஹிதநிஷ் களங்கவநாதியங் கடவுளே போற்றி
ஜோதியா யகண்டா காரமாய் விளங்குந் தூயசை தந்யமே
    போற்றி
  பேதியா நிலைநின் றுலகெலாந்தந்த பிரணவ தெய்வமே போற்றி
நீதியோ டிரக்க சமரச நெறியை நிறுவிய நிமலனே போற்றி.
2. முன்னமோர் நரனால்விளைந்த தீவினையை முனிந்திடும்
    முதல்வனே
      [போற்றி
  பின்னரவ் வினைதீர்ந் துலகெலா முய்யப் பேரரு னளித்தவா
    போற்றி
  நன்னெறி யிகழ்ந்தோர் பிரளயத் தமிழ் நயந்திடு நாதனே
போற்றி மன்னுநோ வாவோ டெண்மரைப் புரந்த மாபெருங்
   
கருணையாய் போற்றி.
3 குழுமியோர் குலையப்பஷைவே றாக்கிக் குழப்பிடுங் கொற்றவா
  போற்றி
  வழிவழி சுருதி முறைமுறை யாக வகுத்தவே தாந்தனே போற்றி
விழியருள் பரப்பி யாபிர காமை விளித்தருள் விமலனே போற்றி
கிழமுதிர் பருவத் தொருமக வளித்த கேடிலாக் கிருபையாய்
    போற்றி
4. தொண்டனை வலிந்துநகர்ப் புறங்கொடு போய்த்துரந்த
    பேரருளினாய்
      போற்றி
  உண்டரூ ரெரிவாய் மடுத்திட முனிந்த மாண்புறு நீதியாய்
    போற்றி  
  கொண்டொரு மகவைப் பலியிடத்துணிந்த கொற்றவன் றெய்வமே
போற்றி பண்டுபோன் மகவீந் தவற்குநல்லாசி பகர்ந்திடும் பகவனே போற்றி.
5. உத்தம தொழும்பற் குறைத்தவாக் கனைத்து முவந்துகாத்
    தனித்தவா  
    போற்றி
  பத்தனை யடர்க்கப் பலமிலா தொல்கிப் பரிவுறும் பரமனே
    போற்றி
  சித்தம்வைத் தவனிற்பன்னிரு மரபு திகழ்ந்திடச் செய்தவா
    போற்றி
  வித்தகன் யோசேப்பினை நனியுயர்த்தும் விட்புல வேந்தனே
    போற்றி
6. கருப்பினி லிஸ்ரேல் மக்களைக் காத்த கருனையங் கடவுளே
    போற்றி.
  விருப்பொடங் கவரை வாரிதி மணற்போல் மிகச் செய்யும்
    விந்தையாய்  
    போற்றி
  திருப்பரு மடிமைத் தனத்தினா லவரைத் திருத்திய தெய்வமே
    போற்றி
  ஒருப்படீஇ யோல மிடுமவர்க் குருகி யுறு துயர் களைந்தவா
    போற்றி.