|
|
7. |
அருளினாற்
செங்கோ லளித்துமோ சேயை யனுப்பிய விமலனே
போற்றி
இருளுறு மனத்தா ரிடைப்பல புதுமையியற்றிய வீசனே போற்றி
மருளுறு மிஸ்ரேல் சிறைதவிர்ந் தேகவரந்தரும் வள்ளலே
போற்றி
தெருளிலாப் பார்வோன் ஜனத்தொடு மடியச் செங்கடல்
விடுத்தவா
போற்றி |
|
|
8. |
மற்றவர்
தமக்கு வழித்துணை யாகி வானமு தருனினாப் போற்றி
வெற்றியங் கிரிமீதுலகெலா நடுங்க விளங்கிடும் விபுதனே
போற்றி
நற்றவன் வழியே விதிவிலக் சருளி நடத்திடு நம்பனே போற்றி
கொற்றமொ டிஸரேல் வளமிகு கானான் குடிபுக வருளினாய்
போற்றி
|
|
|
9. |
மன்னர
சுரிமை முறைநிறீ இக் குடிமை வளந்தரு மகிபனே
போற்றி
அன்னைபோற் கசிந்துந்தந்தைபோற் கடிந்துமாம்பரி
சுணர்த்தினாய்
போற்றி
நன்னெறி யிகந்த மன்னரைச் செகுத்து நலம்புனை நம்பனே
போற்றி
செந்நெறிச் சென்றார்க்குறு துணையாய திரியேக தெய்வமே
போற்றி |
|
|
10. |
கோலைநீத்
தொருசெங்கோலிசாய் மகற்குக் கொடுத்தருள் கொற்றவா
போற்றி
சீலமா யவன்சொன் னயந்துசங்கீதஞ் செவிமடுத் துகந்தவா
போற்றி
சாலமோன் தேவா லயமுவந் தருளித் தரித்திடுந் தற்பரா
போற்றி
மேலைநாள் யூக ஜனஞ்சிறைப் படவும் மீளவு மருளினாய்
போற்றி.
|
|
|
11. |
திருவுளக்
குறிப்பைத் தீர்க்காரன் முன்னந் தெரித்திடுந்தீர்த்தனே
போற்றி
வருவர்மே ஷியக்கென் றடியருக் கினியவாக்கமு தூட்டினாய்
போற்றி
பொருவரு மான்ம ரக்ஷைமார்க்கத்தைப் புதுக்கிய புராதனா
போற்றி
சருவலோகமுமீ டேறவோர் மகவைத் தந்தருள் தந்தையே
போற்றி. |
|
|
|
(உத்தர
சுருதி. ) |
12. |
ஆதிமெய்த்
திருவாக் காய வகிலகா ரணனே போற்றி
கோதிலாக் குணங்கள் பூத்த குவலயத் தொளியே போற்றி
மாதுவித் தாகி யிந்த மாநிலம் புரப்ப லென்று
தாதைபாற் பரிந்து நின்ற தற்பரா போற்றி போற்றி.
|
|
|
13. |
பன்னரு
மஹிமை யோடு பண்ணவர் பரவி யேத்த
உன்னரும் பரமா காயத் துச்சிவீற் றிருந்தாய் போற்றி
புன்னரர் பொருட்டுப் பாவப் புலையுல கத்து மேவிக்
கன்னிபா லுதித்தாய் போற்றி கருணைவா ரிதியே போற்றி.
|
|
|
14. |
வறிதுபுல்
லணையிற் கந்தை வனைந்தொரு குழவி யாகி
அறிதுயி லமர்ந்தாய் போற்றி யலகில்பல் லுயிரை யூட்டிச்
செறிதரு பசிக்காற்றாது தேம்பிநின் றழுதாய் போற்றி
நெறிதிக ழறவோ ராயர் நேர்ந்தநின் மலனே போற்றி.
|
|
|
15. |
ஈசனா
ருரைகொண் டேகி யெகிப்துநா டடைந்து மீண்டு
நாசரேத் தூர்வந் துற்ற நசரேய நம்பி போற்றி
ஆசற வளர்ந்து பெற்றோர்க் கமைந்திடு மைய போற்றி
தேசிக ஞான தீக்ஷை செவ்விதி னடைந்தாய் போற்றி.
|