பக்கம் எண் :

507

16. அம்முறை விரத மேற்கொண் டாரணி யத்து மேவிச்
செம்முறை திறம்பா வண்ணம் ஜெபதபம் புரிந்தாய் போற்றி
மும்முறை முனிந்து பேயைமுடுக்கிய முனிவா போற்றி
எம்முறை பாட்டுக் குள்ள மிரங்கிடு மெந்தாய் போற்றி.

 
17. வந்தது பரம ராஜ்யம் மனந்திரும் புங்க ளென்று
முந்துப தேசஞ் செய்த முத்திவித் தகனே போற்றி
சிந்தனை கசிந்தீ ராறு சீஷரை யழைத்தாட் கொண்டு
விந்தையாய்ப் பரம ஞானம் விளம்பிய் குருவே போற்றி.
 
18. நள்ளுந ரொடுசூ ழுற்ற நரசமூ ஹங்கட் கெல்லாம்
விள்ளருங் கருணை யாலோர் வெற்பிடை விளங்கித் தோன்றி
எள்ளருஞ் சுவிசே ஷத்தி னிருஞ்சுடர் விரித்தஞ் ஞான
நள்ளிருட் பிழம்பு சீத்த ஞானசூ ரியனே போற்றி.
 
19. மையுறு வஞ்சநெஞ்ச மாயவல் லியற்கை முற்றுங்
கையுறு நெல்லி போலக் கண்டலாற் கதியைக்கூட்டும்
மெய்யுறு தருமம் யாவும் விழுத்தக விளம்பி யாங்கு
பொய்யறு சான்றா நின்ற புண்ணிய மூர்த்தி போற்றி.
 
20. பாரிடம் வியக்கத் தீய பாரிடந் துரந்து நேர்ந்த
கோரவெம் பிணிகூன் மூகை குருடுவன் செவிடுபங்கு
தீரமெய்ந் நிமிரப் பேசத் தெரியக்கண் டிறக்கச் செல்ல
ஆரரு ளளித்த திவ்ய வற்புற மூர்த்தி போற்றி.
 
21. அன்றொரு சிறுமி யேழை யமங்கலை சிறுவன் சேமத்
தொன்றிய தொழும்ப னின்னொர்க் குருகிக்கண் கலுழி சிந்திப்
பொன்றிய வுயிர்வந் தெய்தப் புண்ணியம் புரிந்தாய் போற்றி
நன்றிலேன் சிறார்க்கும் ஜீவனல்கிய நம்பா போற்றி
.
 
22. பாழியங் கிரிமீ தோர்காற் பரிதிபோற் பொலிந்தன் பர்க்கு
வாழிய வதனச் சேவை வழங்கிய தேவே போற்றி
ஆழிமீ துலவி யாழி யலையினை யடக்கி யாங்கே
சூழிரும் புசலை நீத்த தொல்லையெம் பரனே போற்றி.
 
23. விஞ்சிய வகங்கா ரத்தால் வினவுவே தியருண் ணாணி
அஞ்சிவா யடைபட் டேக வவிரித ழலர்ந்தாய் போற்றி
வஞ்சரான் மடியு மாறும் மறுத்துயிர்த் தெழும்பு மாறுஞ்
செஞ்செவே யுரைத்த ஞான தேசிக மூர்த்தி போற்றி.
 
24. தொண்டரைத் தெருட்டி யாங்கோர் துறுமலர்ச் சோலை நண்ணி
அண்டர்நா யகன்னெஞ் சீற்றத்தாறுழுல் குளித்தாய் போற்றி
கொண்டொரு முத்தத் தாலே குறிப்பிடக் கட்டுண் டேகிக்
கண்டகர் முன்றி னின்றுடுந்துய ரடைந்தாய் போற்றி.