பக்கம் எண் :

508


25. கைதவர் சினந்து தூய கமலவாண் முகத்து மிழ்ந்து
வைதுமுண் மௌலி வேய்ந்து வாரினா லடிப்ப மாழ்கி
வெய்துயிர்த் திழிசெஞ் சோரி மெய்யெலாம் புதைப்ப யாங்கள்
உய்திற நாடி நின்ற வுபசாந்த மூர்த்தி போற்றி.

 
26. முழுதுநா னறியே னென்று மும்முறை மறுத்த சீடன்
அழுதுளங் கசக்கச் செய்யு மருணோக்க முடையாய் போற்றி
பழுதின்மை யறிந்தும் வேந்தன் படுகொலைத் தீர்ப்புக் கூற
இழுதைய ரிகழ நின்ற யேசுநா யகனே போற்றி.
 
27. எம்பவச் சும்மை தானோ ஹீனமாங் குருசுந் தாங்கி
அம்பதம் பெயர்ப்ப மாழ்கி யணிமறு கணைந்து நின்ற
வம்பவிழ் கோதை மாதர் வாய்திரந் தாற்ற வாண்டோர்
வெம்பரம் பிறுத்தாய் போற்றி வினைத்தொட ரறுத்தாய் போற்றி.
 
28. வேதனை குனிக்கற் பாற்றோ வெங்குரு சறைந்து கொல்லும்
பாதகர்க் காய்மன் றாடிப் பரிந்துவாக் கருளிச் சோரற்
காதரம் புரிந்து ஜீவ வரும்பலி யமலற் காக்கிப்
பூதல முயச்ச மாதி பொருந்திய தேவே போற்றி
.
 
29. பொஞ்குநீ ருலகுக் கெல்லாம் புண்ணியம் பொலியப் பாவ
சங்கடந் தொலைய நாளுந் தனியறந் தழைப்ப வேத
மங்கல வோசை மல்க வானவர் மகிழ மீட்டும்
இங்குயிர்த் தெழுந்தி ரக்ஷை யீட்டிய வெந்தாய் போற்றி.
 
30. மலங்கிய சீட ரோடு வைகலீ ரிருபான் வைகி
நலங்கிளர் வாக்குக்கூறி நயந்தொரு முகின்மீ தேகி
இலங்குமைங் காயங் காட்டி யெம்பிரான் றிருமு னென்றும்
உலங்கிள ரணைமீ துற்ற மாநுவே லரசே போற்றி.
 
31. மூதுல கருக்குஜீவ முக்திசா தனமுண் டாகக்
கோதறுபுனித வாவிக் கொழுங்கதிர்ப் பிழம்பை நல்கிக்
காதலுற் றடைந்தோர் தம்மைக் காப்பது கருதி யென்றுந்
தாதைபாற் பரிந்து பேசுந் தயாபரா போற்றி போற்றி.
            (பரிசுத்தாவியின் பரம்)
 
32. திரித்துவ பராப ரத்திற் றிகழதி பரிசுத் தாத்ம
ஒருத்துவ வநாதி நித்திய வுயர்மகத் துவமே போற்றி
விரித்தமுந் நீர்முகத்து விந்தையாய் விளங்கி மேனாள்
திருத்தரு புவனம் பூத்த தெய்வமே போற்றி போற்றி
.
 
33 . மறைவழிப் படரா மாந்தர் வன்மனந் தனிந்போ ராடி
இறைவழிப் படுத்துந் தூய வெம்பெரு மானே போற்றி
சிறைவழிப் பட்டோர்க் குள்ளந் தெளிந்தநோ வாவைக் கொண்டு
முறைவழிப் போத மீந்த முக்தியா ரணனே போற்றி.