பக்கம் எண் :

509


34. சுத்தமெய் விசுவா சத்தைத் துரிசற விளக்கித் தூய
பத்தனா மரபி ராமைப்பாதுகாத் தளித்தாய் போற்றி
நித்திய ஜீவமார்க்க நெறிகடைப் பிடித்து நின்ற
உத்தமர்க் கியாண்டுநீங்கா வுறுதுணையானாய் போற்றி.

 
35. வலிந்தெனை மருவு கென்று மருட்டிய வனிதைக் குள்ளம்
மெலிந்தழி யாது முன்னோர் விடலையைக் காத்தாய் போற்றி
மலிந்திடு ராஜபோகம் வரைந்தினத் தோடு மோசே
நலிந்துறுநிந்தை நச்ச நயந்தரு ளளித்தாய் போற்றி.
 
36. கோட்டமற் றுளந்தி ருந்திக் குலவுமெய்ப் பத்தி வித்தி
நாட்டம்வைத் தருணீர் பாய்ச்சி நலிவெலா மகற்றி யாதும்
வாட்டமின் றாகவோம்பி வரகதி விளைவித் தன்பர்
ஈட்டமார்ந் துயத்துய்ப் பிக்குமிதயநா யதனே போற்றி.
   
                    தேவாரம் முற்றிற்று.

     
  இவ்வண்ண மேகோ வாவை யிருதயங் கனிந்து போற்றிச்
செவ்விய ரிருவர் தாமுந் தெவிட்டிடாப் பரமா னந்தப்
பௌவவா ரிதியின் மூழ்கிப் பரவச ராகி நின்றார் திவ்விய
வாக்கச் சீர்மை ஜெகத்துரை தெரிப்ப தேயோ.
54
     
                        இகபரசந்திப் படலம் முற்றிற்று  
     
 
சுவர்க்காரோகணப் படலம்
 
 
     
  மதிதிகழ் மறைவ லாளர் மரபினிற் சென்று சேர்ந்த
துதிபெறுபரமா காயச் சூழலில் விளங்கத் தோன்றும்
அதிபரி சுத்த மாய வாயிரத் தெட்டு மாற்று
மதிபெறு பசும்பொற் சோதி மயகிரி பரம சீயோன்.
1
   
  சத்தாகிச் சித்துமாகித் தணப்பிலா னந்த மாகி
நித்தியந் திகழ்த்தி நிற்கு நிருமல திரியே கத்தின்
உத்தம கிருபை ஞான வொளியதி புனித மென்னும்
முத்தலைச் சிகர மோங்கித் திகழ்வதம் முதிய குன்றம்.
2
   
  தண்ணளிப் பெருக்கத் தாலே சருவலோ கேசன் மைந்தன்
அண்ணலார் புனித நீதிக் காருயிர் பலியாய் நல்கி
மண்ணுல கரையீ டேற்ற வரன்முறை யீட்டி வைத்த
புண்ணியத் திரளே யென்னத் திகழ்வதப் பொலன்கொள்வெற்பு.
3