பக்கம் எண் :

510

தற்பர னருளிற் றோன்றித் தயைமல்கித் தருமம் புட்பித்
தற்புத சுகிர்த முற்றி யளவில்புண் ணியம்ப ழுத்துப்
பொற்புறு நித்யா னந்த போகத்தைக் கனியும் ஜீவ
கற்பக விருக்ஷ மோங்கித் திகழ்வதக் கனகக் குன்றம்.
4
 
மணவணி பொதுளி நித்ய மங்கள கீத மல்கிக்
குணநிதிக் குவைக ளோங்கிக் குலவுபே ரின்பம் பொங்கி
இணரொளி மகிமைக் கற்றை யெங்கணும் பரம்ப வீசி
உணர்வினுக் கதீத மாகி யோங்குவ துயர்பொன் மேரு.
5
 
அன்பினார் கலிநீர் பொங்கி யருண்மடை திறந்தா லென்னப்
பொன்பொலி சிமய நின்றொர் புத்தமு தருவி போந்து
நன்பெரு மணிக ளாய நவநிதி வரன்றிப் பாயும்
மன்பெரும் ஜீவ கங்கை மடுப்பதம் மகவே தண்டம்.
6
 
புகலருங் கடவுள் வேந்தன் புகழ்மிகு புனித ஞானத்
தகவினி லுயர்வுற் றோங்கித் தண்ணளிப் பெருக்கிற் பல்கி
மகிமையில் ஜோதி வாய்ந்து வைகலின் விகற்பின் றாகிப்
பகலொளி திகழ்த்தி நிற்கும் பவித்திர பரம சீயோன்.
7
 
தரிசன வேதி யாய சாதரூ பாச லத்திற்
பரிசன ராய தூய பவித்திர வான சேனை
துரிசற விமைக்குந் தாரா கணமெனச் சுலவித் தோன்றி
விரசுவர் திகாந்த மெங்கும் விமலவேந் தாணை மேவி.
8
 
தணிவரும் ஜோதி பூத்த தடங்கிரிச் சார லெங்கும்
பணிவிடை புரியு மாவிப் பண்ணவர் தொகுதி மல்கி
அணியணி யாக நின்றங் கருட்டிரி யேக தேவைப்
பணிகுவர் பரமா னந்த பரவச ராகிப் போற்றி.
9
 
கற்பனை கடந்து நிற்குங் காரணா தீத மான
பொற்புறு புனித வேந்தன் பூரணா னந்த வாழ்வின்
அற்புதக் காட்சி சொல்ல வருகனோ வூழிப் போதைப்
புற்புதம் பொதிந்து காட்டப் பொருந்தினும் பொருந்தா தன்றே.
10
 
மிருத்தொடிவ் வுலக பந்தம் வீசிய மறையோ ரின்ன
திருத்தகு சீயோ னென்னுந் திருமலை யடிவா ரத்தை
அருத்தியோ டணைந்து முன்னிட் டாண்டகை திருப்பொற் பாதங்
கருத்தினோ டுள்ளிப் போற்றிக் கனிந்துவந் தேத்துங் காலை.
11