|
ஐயன்மீர்
வம்மின் வம்மின் னமலவேந் தடியீர் வம்மின்
வையகம் புரந்த ஜேசுமலரடித் தொழும்பீர் வம்மின்
துய்யநல் லாவிக் கென்றுந் துக்கமூட் டாதீர் வம்மின்
உய்யுநூ னெறிவிடாத வுத்தம தவத்தீர் வம்மின்.
|
12 |
|
|
|
|
என்றுப
சரித்துக் கிட்டி யிதயத்து முகத்து மன்பு
துன்றிமன் னுவகை வெள்ளஞ் சொரிந்தெனத் துரிசில் தூதர்
மன்றல்வா சகமி ழற்றி வந்துவே தியரை யேற்றார்
கன்றுகாண் கறவை யேபோற் கசிந்துளங் கரையு நீரார்.
|
13 |
|
|
|
|
அன்பிற்கு
முண்டோ யாண்டு மடைக்குந்தா ழார்வ மிக்கார்
புன்கணீர் பொசிந்து போந்து பூசலைத் தருமற் றென்னாத்
தென்புலந் திகழ்த்தி நிற்குஞ் செந்தமிழ் மொழிக்குச் சான்றாப்
பொன்புலத் துறுபுத் தேளிர் பூஜிதை புரிந்தா ரன்பில்.
|
14 |
|
|
|
|
வேதியர்
தாமுன்கண்ட வித்தக ரிவரே யென்னாக்
காதலோ டளவ ளாவிக் கடன்முறை பரிவிற் செய்து
மேதகு வியப்பு னோடு விட்புலத் தரசை வாழ்த்த
ஏதமில் வான தூத ரிருவரு மிதனைச் சொன்னார்.
|
15 |
|
|
|
|
மண்ணுல
கத்தி னின்று வரன்முறை மரண நீந்திப்
புண்ணிய லோகத் தெல்லை புகுந்திர க்ஷணைபெற் றுய்ய
நண்ணிய நும்போல் வார்க்குப் பணிபுரிய நலம்பெற் றுள்ளேம்
அணணல்வா னகத்து வேந்த னாணையி னடுத்தேம் நும்பால்.
|
16 |
|
|
|
|
எண்ணருந்
தவத்தீர் வம்மி னெம்மொடென் றழைத்துக் கூட்டித்
தண்ணளி யொடுகை கோத்துத் தடங்கிரி மீது செல்வார்
மண்ணர கீடங்கட்கு வானத்தை வணக்கி நின்ற
புண்ணியப் பெருக்கை யாரே புனைந்துரை செய்யற் பாலார்.
|
17 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
தூல
தேகம் விட்டடைந்த தூய சூக்குமத்தனுச்
சீல ராய வேத வாணர் சிந்தை யுட்க ளிப்பினால்
மேலு மேலு யர்ந்து செல்க திக்க ணேவி டாய்த்திடார்
சால வும்பர் தம்பி ரான்ற யோர்ச்சி தத்தை யுள்ளுவார்.
|
18
|
|
|
|
|
துண்பநாச
தேச மார்தொடர்ச்சி நின்றி ழுத்துமீ
நன்பு லத்து வழிந டத்தி நண்ணுவிக்கி னம்மெலாம்
பின்ப டுத்தி மரண நீர்ப்பெ ருக்கை யுங்க டத்திய
அன்பின் வல்ல பத்தை யுன்னி யானந் தங்கொண் டாடுவார்.
|
19
|