|
வந்து
வந்து டற்று துன்பம் வறுமை துக்கம் வம்பவிழ்
நிந்தை மல்குசாக ரத்தி னின்றெ டுத்து நித்திய
விந்தை யாய சிற்சுகத்து வீட்டு வாழ்வு காட்டிய
சுந்த ரக்குமார ணைத்து தித்தி றைஞ்சி வாழ்த்துவார்.
|
20 |
|
|
|
|
காய
மோடு நாற்ற மிக்ககந்தை யைக்க ளைந்துநற்
றூயபைம்பொ னாடை நல்கி நேய மிக்க தூதரைச்
சேயுயர்ந்த கதிவ ழிச்ச காய ராச்செய் திவ்விய
நாய கக்கிரு பாந லத்தை நனிவி யந்து போற்றுவார்.
|
21 |
|
|
|
|
பண்டி
லாத புனித மாய பொறிபு லன்ப டைத்தலில்
உண்டு பட்ட வதிச யத்தி னுள்ளெ ழுந்த வுவகையும்
அண்டர் வாழ்ப தந்த மக்கு மணுக வந்த வாக்குமும்
விண்டு விண்டு போற்றி செய்து விமல னைப்ப ராவுவார்.
|
22 |
|
|
|
|
பொருவி
லாவ ருட்பு யல்பொ ழிந்த வன்பு மாரியால்
தரும மாய சாலி விண்ச தோத யம்வி ளைத்திடும்
அருமை யாய ஜீவ போன கானந் தத்தி னளவிலாத்
திரும லிந்த செவ்வி கண்டு செங்கை கூப்பி யேகுவார்.
|
23 |
|
|
|
|
புனித
ராஜ சமுக நின்று போந்து லாவு மாதயைப்
புனித ருங்குளிர்ச்சி யோடு பாரி சுத்த வனல்வெதுப்
பினிது மல்கு மகிமை யாய விரவி யத்த மின்றியே
நனிதி கழ்த்து நீர்மை கண்டு நம்ப னைப்ப ழிச்சுவார்.
|
24 |
|
|
|
|
புதுமை
யாய காட்சி கண்டு நின்று நின்று புகழுவார்
மதுர கீத கான மல்கு மரபு ணர்ந்து மகிழுவார்
குதுக லத்தோ டரச னாமம் வாழி யென்றுகூறுவார்
கதுமெ னக்க தித்தெ ழுந்து ககன மூடு படர்குவார்.
|
25 |
|
|
|
|
முத்தி
யின்பங் கருணை தர்மம் முற்றுபாரி சுத்தமாண்
சத்தி யங்கு லாவி நிர்த்த னம்பு ரிந்து சந்ததம்
நித்தி யானந் தத்தை நல்கு நீர்மை கண்டிவ் வேதியர்
துத்தி யஞ்செய் துவகை யோடு தொழுது மீது துருவுவார்.
|
26 |
|
|
|
|
இனைய
சீல ராக வுன்ன தத்தை நாடி யேகுமவ்
வினைய வேதி யர்க்கு வந்த விபுத தூத ரிருவரும்
முனைவ னைப்ப ராய்வி தேக முத்தி யுற்ற மொய்ம்புளீர்
நினைமீ னீண்டி யாஞ்சொல் வாச கம்மெ னாநி கழ்த்துவார்.
|
27 |