பக்கம் எண் :

513

                    வேறு.
   
  மாய மின்மனத் தீரிந்த மாதலந்
தூய ராகித்தொ ழும்புபட் டார்க்கெலாந்
தாய கம்புரை யத்தரும் பேறெலாஞ்
சீயொ னென்னுந்தி ருமலை காண்டிரால்.
28
   
  மாண்ட குந்திரு மாமலை யுச்சியில்
ஈண்டு ஜோதிப்ப ரமவெ ருசலேங்
காண்ட குந்திரு மாநகர்க் காட்சிதான்
சேண்ட யங்கித்தி கழ்வது காண்டிரால்.
29
   
  உத்தமத்திருத் தொண்டங்கு ஞற்றிடு
விதத கந்திகழ் மெய்ப்பரி சுத்தராம்
நித்ய சூரிகள் சங்கநி ரைநிரை
பத்தி யிற்றிகழ் கின்றன பார்த்திரால்.
30
   
  ஜீவபுத்தகத் துப்பெயர் தீட்டியும்
ஆவ லித்தமு தற்பல னாகியுந்
தேவ தொண்டுக்க மைந்ததி ருக்குழாம்
மேவு சங்கவி லாசமுங் காண்டிரால்.
31
   
  போத மல்குசம் பூரண மாய்ப்பலன்
மேத கப்பெற்ற மேம்படு வித்தக
நீதி மான்களி னாவிநி கழ்ந்திடும்
மாத லத்தின்ம கிமையும் பார்த்திரால்.
32
   
  உன்ன தத்திரி யேகரொ ருதிருச்
சந்நி தானம கிமைத ழைத்திடும்
பன்ன ரும்பர லோகப வித்திரப்
பொன்னி லத்துப்பு துமையும் பார்த்திரால்.
33
   
  இத்தி ருத்தகு வானவி ராஜ்ஜியத்
துத்த மக்குடி யாகவந் தூன்றினீர்
நித்ய ஜீவவி ருக்கநி லவுறுஞ்
சித்தி ரப்பர தீசினிச் சேருவீர்.
34
   
  ஜீவ மாநதி யாடியுந் திவ்விய
ஜீவ நாட்டுடை சீரணி தாங்கியும்
ஜீவ நாயகன் சேவடி போற்றியும்
ஜீவ மாக்கனி யுண்டுந்தி கழுவீர்.
35