|
துஞ்சல்
சோரல்து யருற லின்றிநம்
நெஞ்சி ருக்குநி ருமல வேந்தனை
அஞ்ச லித்தங்க வரொடு மாரியீர்
சஞ்ச ரித்துச்ச தோதயந் தங்குவீர்.
|
36 |
|
|
|
|
பெருந்த
கைக்கன்பு செய்திடும் பெற்றியீர்
வருந்து மானிட தேகம டிந்ததால்
பொருந்து றாதும ரணமும் புன்கணுந்
திருந்து வீரினி நித்திய ஜீவியம்.
|
37 |
|
|
|
|
முந்தை
யாபிர காமுதன் மூவராந்
தந்தை யாரொடுந் தீர்க்கத ரிசன
அந்த ணாளரைக் கண்டங்க ளவளாய்ச்
சிந்தை யானந்தங் கொள்ளுவிர் சேர்ந்தினி.
|
38 |
|
|
|
|
வெஞ்சி
னக்கன லுக்குவி லக்கியுந்
தஞ்ச மாக்கியி ரக்ஷணை தந்துமன்
செஞ்செ வேமுத்தி சேர்த்திடுந் தெய்விக
மஞ்ச னைக்கண்டு வாழத்திவ ணங்குவீர்.
|
39 |
|
|
|
|
மாறி
லாப்பர மானந்த வைப்பிலெம்
பேறி யாவெனிற் பிச்சுல கத்துநாள்
தோறு நீர்துய்த்த துன்பமுந் துக்கமும்
ஈறில் வேந்தன்ம றந்தில ரெண்ணுமின்.
|
40 |
|
|
|
|
துன்பந்
துக்கந்தொ டர்வதின் றாலினி
இன்ப முஞ்சுக வாழ்வுமி யைந்துநீர்
மன்பெ ரும்பர லோகம கத்துவற்
கன்ப ராகிய டிநிழல் வைகுவீர்.
|
41 |
|
|
|
|
மனித
ஜீவரை வானவ ராக்கிடுந்
தனித மாரருட் சந்நிதி நின்றுநீர்
புனித ஜீவகி ரீடம்பொ றுத்தென்றுங்
கனித னீர்மையிற் கண்டும கிழுவீர்.
|
42 |
|
|
|
|
மானி
டப்பல வீனம்வ ருத்தமற்
றூனுடம்பொடொ ருவின வாலினிக்
கோனி டம்படு மூழியங் கோதற
வானு டம்பின்ம கிழ்ந்துசெய் கிற்பிரால்.
|
43
|