பக்கம் எண் :

515

  விண்ண வர்க்கர சன்றிரு மேனியைக்
கண்ணிற் கண்டுக ளித்திடுங் கண்மலர்
அண்ண லார்திரு வாக்கைநும் மஞசெவி
உண்ணு மாரமிர் தாகவு வக்குமால்.

44
   
  முன்னிங் கும்மின்மு யங்கிய நேசரைச்
சந்நி தானத்துக் கண்டுத ளிர்ப்பிரால்
இன்ன வாறிங்கி னிவரு தூயரை
நன்ன ரேற்றுந யந்தும கிழுவீர்.
45
   
  அகில லோகத்த ரசன்பு னிதமார்
ககன கோளத்து லவுமக் காலையில்
புகரி லாமணிப் பூணணி பூண்டுடன்
மகிமை யோடுமு லவிவ ருவிரால்.
46
   
  காக ளத்தொனி காட்டிக்க டவுளார்
மேக வாகன மீதுவி ளங்கியப்
போக பூமிந டுப்புரி போதுநீர்
ஓகை யோடங்க வரோடு றுவிரால்.
47
   
  ஈச னார்நடுத் தீர்வையி யம்பநீ
தாச னத்தின மருமக் காலைநீர்
மாச னத்திர ளுக்குமுன் வந்தரு
காச னத்தினி தாகவ மருவீர்.
48
   
  பூத லத்தைக்கெ டுத்தபொல் லாங்குடைத்
தூத ருக்கும் மார்க்கத்தொ குதிக்கும்
நாதன் றண்டனைத் தீர்ப்புந வில்கையில்
நீத சான்றுரை நீருநி கழ்த்துவீர்.
49
   
  புதிய வானும்பு வியும்ப டைத்துமேல்
விதிநி டேதம்வி தித்துநம் மாண்டகை
அதிப னாவர சாளுமக் காலைநீர்
பதிதொ றும்பரி பாலக ராகுவீர்.
50
   
  இத்தி றத்தவி னியும்ம நுபவத்
துய்த்து ணர்ந்தறி மின்னுரை யாலிதை
வித்த ரித்துரைக் கப்பெறு வேமலேம்
எத்தி றக்குறை வும்மிலை யிண்டென்றார்.
51