| |
கின்னரந்
தம்புரு வீணை கேழ்கிளர்
இன்னரம்புளரிசை யெழால்மி டற்றொலி
மன்னிய பெருஞ்சுர மண்ட லத்தொனி
பொன்னுல கெங்கணும் பொதுளிற் றென்பவே.
|
60 |
| |
|
|
| |
உத்தம
கிறிஸ்தவர்க் கோகை பேசிநீர்
அத்தரை யுலகைவிட் டளவில் பேரின்பப்
புத்துல கடைந்ததே புதுமை யாமெனா
வித்தக வீணையை மீட்டிப் பாடுவார்.
|
61 |
| |
|
|
| |
பன்னரு
மகாத்துமர் பலரொ ருங்குதொக்
கந்நிலை யுவந்துப சரித்தங் காத்துமப்
பன்னிய ரைக்கொடு பரம நாயகன்
சந்நிதி மணவறை சாரு வேமெனா.
|
62 |
| |
|
|
| |
எல்லையில்
வான்கண மெங்குமீண்டியே
தொல்லையம் பரனடி தொழுது வாழ்த்தவும்
நல்லிசைக் கருவியி னாத மோங்கவும்
பல்லிய முழுங்கவும் பாடி யேகுவார்.
|
63 |
| |
|
|
| |
சாதுசங்
கத்தவர் தம்மி லித்தகு
மாதவ ரிருவர்வந் தடைந்த மாட்சியும்
ஆதரித் தெதிர்கொளப் பெற்ற வாக்கமுங்
காதலித் துவகையிற் கனிந்து பேசுவார்.
|
64 |
| |
|
|
| |
எங்கணுந்
தண்ணில வெறிக்கும் பூரண
திங்களுக் களவிலை யெனினுஞ் சிந்தையிற்
பொங்குநீர் நிலையெலாம் பூத்த லர்ந்தன
செங்கம லங்களுஞ் செப்பற் பாலதென்.
|
65 |
| |
|
|
| |
காட்சியின்
புதுமையு மதுர கானத்தின்
ஆட்சியுங் கண்டுகேட் டறிந்த வாரணர்
மாட்சிசான் முத்தியுண் மருவி னாமெனச்
சூழ்ச்சிசெய் துவகையுட் டுதைந்து போயினார்.
|
66 |
| |
|
|
| |
ஓதரு
மித்தகு புனித வுத்தம
சாதுசங் கத்துடன் றரிக்கப் பெற்றனம்
மாதயை மாதயை யெனம கிழ்ச்சியாற்
போதமற் றனரெனப் பொருமி விம்மினார்.
|
67
|