பக்கம் எண் :

518

  இலகுமோ க்ஷானந்த மோவி தென்கொலாம்
உலகசிற் றின்பெலா மொழியு மேயென்பர்
அலகிலவ் வானந்த வளவைக் காட்டிடற்
குலகில்வே றெதையெடுத் துவமை கூறுகேன்.

68
   
  உன்னதா னந்தமென் றுரைப்ப தன்றிமற்
றென்னதான் யாவர்தா மெண்ணி யெண்ணி மன்
சொன்னபோ தினுமணுத் துணைக்குப் போதுமோ
தன்னிகர் தம்பிரான் றருமப் பேற்றிற்கே.
69
   
  இனைத்தென வாக்கினுக் கதீத மெண்ணவும்
மனத்தினுக் கதீதமவ் வரம்பி லானந்தம்
எனைத்துணை யளவைமற் றெடுத்துக் காட்டினுந்
தினைத்துணை யினுமலை பெரிதென் சீர்மையாம்.
70
   
                    வேறு.
   
  பன்ன ரும்பவித் திரக்குழாம் பல்லியந் துவைப்ப
மன்னர் மன்னரை யெதிர்கொளு மாண்பினு மாண
நன்னர் வேதியர் தமையெதிர் கொண்டுட னடத்தித்
துன்னி னார்முத்தி மாநகர்த் தோரண வாயில்.
71
   
  கோக்கு மாரன்செங் கோன்முறைக் குறையுளாய்க் குலவி
மேக்கு யர்ந்தமா மகிமையின் கோபுரம் விளங்கிப்
பாக்கி யம்பொதிந் தனவர தானந்தம் பயிலும்
மோக்க வாயிலைக் கண்டனர் முதிர்கடைப் பிடியோர்.
72
   
  கண்டு காதலித் திறைஞ்சினர் கருணையங் கடற்குப்
பண்டுண் டாக்கிய வருண்மடை யாமெனப் பரிவில்
அண்டர் கோன்றிரு வடித்துணை யன்பொடு பரவி
விண்டு தோத்திரம் புரிந்தனர் விநயபூ ருவமாய்.
73
   
  மன்னு மித்திரு நகர்க்குளிவ் வாயிலின் வழியாய்த்
துன்னி நித்திய ஜீவதா ருவைச்சுதந் தரிக்கப்
பன்னு நன்னடை பற்றியோர் பாக்கிய ரென்னாப்
பொன்னே ழுத்துறு புதுமைகண் டுளமகிழ் பூத்தார்.
74
   
  ஆங்க டுத்திரு தூதரு மையன்மீ ரணிகொண்
டோங்கு பொற்கடை வாயிலைத் திறக்கென வுரித்திற்
பாங்கொ டும்விளி மின்னெனப் பணித்தலும் பனவர்
வீங்கு மெய்யுணர் வொடுதட்டி விளிக்கலுற் றனரால்.
75