பக்கம் எண் :

519

                   (கடைதிறப்பு.)
     
  கேடுமல்கிய நாசதே சத்துளேங் கிருபை
நாடி வந்தெமைப் பிடித்துநன் னெறியிலே நடத்த
ஓடி வந்திளைத் துறுமர ணத்தையூ டுருவித்
தேடி வந்துகண் டடைந்துளேந் திருக்கடை திறமின்.
76
   
  நிருத வெஞ்சிறை மறிந்துளே நீசரே முக்காய்க்
குருதி யின்விலை கொடுத்தெமை யாட்கொண்ட கோமான்
சுருதிமார்க்கத்துத் தொழும்புபட் டுளமவர் துணைத்தாள்
கருதி வந்தனங் கருணையீர் கடைதிறந் தருண்மின்.
77
   
  ஜேசு வின்மதி வதனமுஞ் செங்கனி வாயும்
நேசமுங்கரு ணையும்பொழி நேத்திரங் களுநற்
றேசு லாந்திரு மேனியுஞ் செம்மலர்ப் பதமும்
ஆசை யங்கனன் மூட்டுவ வருட்கடை திறமின்.
78
   
  பாவ தாருவின் பழநுகர் தீவினைப் பயனுஞ்
சாவு மெம்மைவிட் டகன்றனதற்பர னருளால்
வீவின் றாகிமே னாண்முளைத் தோங்கிவிண் படர்ந்த
ஜீவ தாருவைக் காணுமா றருட்கடை திறமின்.
79
   
  பாவ மாஞ்சுடு பாலையிற் பகலெலா முழன்று
தாவ ருங்கடுந் தாகவி டாய்கொண்டு தவித்திங்
காவி யேவழி காட்டவந் தடுத்தன மடியேம்
ஜீவ ஊற்றுநீர் வேட்டனந் திருக்கடை திறமின்.
80
   
  இலகு மைந்துகா யங்கொண்ட வடைக்கலத் தெழிலும்
அலகை யின்றலை நசுக்கிய வரவிந்தச் சரணும்
உலகு ளேமுக்கென் றோங்கப யாஸ்தமு முளவெம்
அலகி லாண்டகைக் கடியரே மருட்கடை திறமின்.
81
     
  அம்பு ராசிசூ ழவனிக்கீ டேற்றத்தை யளிப்பான்
உம்பர் நின்னதஞ் சுதனைத்தந் துன்னத வன்பால்
எம்பி ரானனுக் கிரக்ஷணை யருளெகோ வாவாந்
தம்பி ரானடித் தொழும்பரேந் தலைக்கடை திறமின்.
82
     
  அருளி னாலெமை யறிந்தன மருள்வழிப் பட்டேம்
அருளி னாரமு துண்டன மருளுயி ரடைந்தேம்
அருளி னாற்புறங் கண்டன மடுபகை யனைத்தும்
அருளி னாற்கதி யடுத்தன மருட்கடை திறமின்.
83